Samstag, 1. Dezember 2012

யோகம்

தரித்திர யோகம். இது ஒரு அவயோகம்.

பொருள் இல்லாத, கையில் காசு இல்லாத, அன்றாடம் பணத்திற்கு அல்லாடும் நிலைமையை, தரித்திர நிலைமை என்று வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான தரித்திரங்களும் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, திருமணமானவர்களுக்கு, அனுசரனையான மனைவி இல்லை என்றால், அதுவும் தரித்திர நிலைமைதான். சோம்பேறியான கணவன் அல்லது மனைவி வாழ்க்கைக்குத் தரித்திரமானவர்களே!

யோகத்தின் அமைப்பு: பலவிதமான அமைப்புக்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று இருந்தாலும் இந்த யோகம் உண்டு. மனிதனை அல்லாட வைக்கும் கிரக அமைப்புக்கள்:

1. குரு 8ஆம் வீட்டு அதிபதியாக இருந்து, ஜாதகத்தில் லக்கினாதிபதியும், ஒன்பதாம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் வலிமையின்றிக் கெட்டிருப்பது, இந்த யோகத்தை உண்டாக்கும்

2. குரு, செவ்வாய், சனி, புதன் ஆகிய நான்கு கிரகங்களும் நீசம் பெற்று அல்லது அஸ்தமனமாகி 5,6,8,11,12ஆம் வீடுகளில் அம்ர்ந்திருக்கும் நிலைப்பாடு இந்த யோகத்தை உண்டாக்கும்.

3. ஒன்பதில் சனி இருந்து மற்றொரு தீய கிரகத்தின் பார்வையைப் பெறுவதும், லக்கினத்தில் சூரியனும், புதனும் கூட்டாக இருந்து, நவாம்ச லக்கினம் மீனமாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்

4. குரு, புதன், சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 8,6,12,ஆம் வீடுகளில் இருப்பதும், 12ஆம் வீட்டதிபதி சூரியனின் பார்வையைப் பெறுவதும் இந்த யோகத்தை உண்டாக்கும்

5. வலிமை குன்றிய சுக்கிரன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,10,11,6,7,8 ஆகிய வீடுகளில் அமர்ந்திருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்

6. நீசம் பெற்ற சுக்கிரன் லக்கினத்தில் இருந்து, (கன்னி லக்கினத்திற்கு மட்டும் அது சாத்தியம்) ஜாதகத்தில் குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நீசம் பெற்றிருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்!

7. நவாம்ச லக்கினம், சனி, மற்றும் வலிமை குன்றிய குருவின் பார்வையில் இருப்பது இந்த யோகத்தை உண்டாக்கும்

8. குரு ஜாதகத்தில் 6 அல்லது 8ஆம் வீட்டில் இருந்து, குருவிற்கு அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்

9. லக்கினம் ஸ்திர ராசியாக இருந்து, கேந்திர கோணங்களில் தீய கிரகங்கள் வலுவாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்

10. இரவு நேரப்பிறப்பாக இருந்து, ஜாதகனின் கேந்திர கோணங்களில் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் வலிமை இழந்து இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும் இந்தத் தரித்திர அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டமில்லாமல் பல முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க நேரிடும். வாழ்க்கை பலவிதங்களில் அவதியாக இருக்கும்.சமூகத்தில் உரிய மதிப்பு இருக்காது. எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

துருதுரா யோகம்

யோகம் : அனபா சுனபா யோகங்கள் இரண்டும் இருந்தால் துருதுராயோகம் என்பது அனபயோகமும் சுனபயோகமும் ஒரு ஜாதகத்தில் ஒருங்கே அமைந்தால் உண்டாகும். உங்களுக்கு இந்தயோகம் இருப்பதால் நீங்கள் ஆஸ்திகள் உடையவராய் இருப்பீர்கள். எப்பொழுதும் உங்கள் கைவசம் பணம் இருந்து கொண்டே இருக்கும். இது உங்களுடைய இயற்கையான இரக்கத்தன்மையையும் பெருந்தன்மையையும் கெடுக்காது. புகழ் உங்களை அரவணைக்கும். வாகனயோகங்கள் உண்டாகும்.

துவஜ யோகம்


துவஜ யோகம்! துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம். இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.

யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும். தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன் பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள். A planetary combination formed by all the malefic placed in the 8th house and all benefices in the ascendant. Under this combination, a leader is born

துஷ்கிரிதியோகம்
அவயோகம் துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும். பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும். இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.

தேவேந்திர யோகம்


தேவேந்திர யோகம் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs) 1. ரிஷபம் (Taurus), 2. சிம்மம் (Leo), 3. விருச்சிகம் (Scorpio) 4. கும்பம் (Aquarius) ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்! ”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?” பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள். உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்

யோகத்தின் பலன் என்ன? 1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome) 2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான். 3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?) 4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்

யோகத்திற்கான அமைப்பு. 1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும் 2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும். 3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும் 4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்: லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன் A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and the lords of 2nd and 10th houses in mutual exchange. This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas. He attains a very high social status.

தைன்ய பரிவர்த்தனை யோகம்


தைன்ய பரிவர்த்தனை யோகம்! தைன்ய எனும் வடமொழிச் சொல்லிற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

dainya — poverty = வறுமை dainya — and degradation = பங்கப்பட்ட dainya — humbleness; தாழ்ந்த dainya — humility = இழிவு, அவமானம் இதில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியாது

யோகத்தின் அமைப்பு: ஆறாம் வீட்டு அதிபதி, 1,2,3,4,5,7,9,10 & 11 ஆம் வீட்டுக்காரர்கள் ஒருவருடன் பரிவர்த்தனையாகி, அவருடைய வீட்டில் மாறி அமர்ந்திருக்கும் நிலைமை, இந்த யோகத்தைக் குறிக்கும்.

வில்லனுக்கு, உங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போன்ற நிலைமை! உங்கள் மொழியில் சொன்னால் ஒரு கிரிமினலுக்கு உங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போன்ற நிலைமை. என்னென்ன விளைவுகள் வரும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

பொதுப்பலன்: பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட வீடுகளால், வீட்டு அதிபதிகளால் உண்டாகும் பலன்கள் கெட்டுவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக்கொண்டு விடும்! ஜாதகனுக்குத் தொடர்ந்து உபத்திரவங்கள் இருக்கும். உடற்கோளாறுகள் உண்டாகும். சிலர் துஷ்டத்தனம் மிகுந்தவர்களாக அல்லது ஒழுக்கமற்றவர்களாக இருப்பார்கள்.

The 6th house lord exchanges houses with the Lagna lord, or the 2nd lord, or the 3rd lord, or the 4th lord, or the 5th lord, or the 7th lord, or or the 9th lord, or the 10th lord, or the 11th lord Result : This combination leads to a wicked nature, persistent trouble from opponents, and ill health. wicked = sinful, mischievous, immoral =

துஷ்ட, கெட்ட, தீய, ஒழுக்கமற்ற, பாவகரமான என்று பொருள் கொள்ளவும் எனக்கு இந்த யோகம் இருக்கிறதே என்று யாரும் நொடிந்து போய் உட்கார்ந்து விடவேண்டாம். ஜாதகத்தின் வேறு அம்சங்களால் இது (இந்த யோகம்) தள்ளுபடியாகி இருக்கலாம் அல்லது செல்லாமல் போயிருக்கலாம். ஆகவே ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்! லக்கினாதிபதி அல்லது ஒன்பதாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்குப் பல உபத்திரவங்கள் பக்கத்திலேயே வராது. வந்தாலும் ஓடிவிடும். அப்படியே வந்தாலும் ஜாதகன் அவற்றை ஒரு கை பார்த்துவிடுவான். He will have the standing power or he will be equipped to handle any situation.

நரேந்திர ராஜயோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு , சுக்கிரன் , தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில் நல்ல பல நன்மைகள் கிடைக்கும்

நிஸ்வா யோகம்


நிஸ்வா யோகம்! ஸ்வா எனும் வடமொழிச்சொல்லிற்கு செல்வம் என்று பொருள்.நி என்னும் சொல் உடன் சேரும்போது மறுக்கப்பெற்ற செல்வம் என்று பொருள்படும்! (Sva means Wealth and Nisva means one devoid of wealth) லட்சணம் என்பது ‘அவ’ எனும் சொல்லைச் சேர்க்கும்போது மாறுபடுவதைப் போல அது என்று வைத்துக் கொள்ளுங்கள் செல்வம் எப்படி மறுக்கப்படும்? மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.

1. வராமல் போகலாம்.

2. வருவதைவிட நமது தேவை அதிகமாகப்போய் பற்றாத நிலை ஏற்படலாம்.

3. தேவையான அளவு அல்லது தேவைக்கு அதிகமாகவே வந்து நம் கையில் தங்காமல் போகலாம். எது எப்படியோ, பல சமயங்களில் நாம் பணமின்றி அல்லாட நேரிடும் நிலை ஏற்படலாம். அதற்குப் பெயர்தான் நிஸ்வா யோகம்

அதற்கான அமைப்பு என்ன? இரண்டாம் வீட்டு அதிபதி தீமைபயக்கும் 6, 8, 12ஆம் வீடுகள் ஒன்றில் ஜாதகத்தில் இருப்பது இந்த அமைப்பாகும். இந்த அவயோகமாகும்.

ஆகவே, பனம், பொருள், செல்வம் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னவாகும் என்பது என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் இதற்கு விளக்கம் எழுதவில்லை. உங்கள் சிந்தனைக்கே அதை விட்டுவிடுகிறேன்.

பரிகாரம் என்ன? உபவாசம் இருப்பதும், தீவிர இறைவழிபாடும் மட்டுமே இதற்குப் பரிகாரம். பிரச்சினை முழுமையாக நீங்கி விடுமா? ஓரளவு குறையும். அதோடு தாக்குப்பிடிக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்

எச்சரிக்கை: யோகங்கள் என்பது வடித்த சாதத்தைப் போன்றது. வடித்த சாதத்தில், பருப்பையும் நெய்யையும் சேர்த்தால் சுவையாக இருக்கும். அல்லது சாம்பாரை ஊற்றிக் குழைத்துச் சாப்பிட்டால், வேறு ஒரு சுவை கிடைக்கும். வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று விதம் விதமாகச் சேர்க்கும்போது, விதம் விதமாகச் சுவையான உணவு கிடைக்கும். அதுபோல யோகங்களுடன், மற்ற கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, சுயவர்க்கப்பரல்கள் எனும் மசாலாக்களைச் சேர்க்கும்போது யோகங்களின் சுவை அதாவது தன்மை அதாவது பலன்களும் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள் ஆகவே இந்த அவயோகம் இருப்பவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் அலசிப் பார்க்க வேண்டுகிறேன்.
அரிஷ்ட யோகம்
படுக்கவைக்கும் யோகம்
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும். உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்

அரிஷ்ட யோகம் 1 (அவயோகம்தான்) தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு! 1 லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga: The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)

2. எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).

பத்ரா யோகம்


பத்ரா யோகம்: புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”

என்ன பலன்? ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான். அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்! அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்! வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான். செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான். 
Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house - intellectual, learned, rich.

பந்துபிஸ்த்தயக்த யோகா


பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்) 4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும். அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.

பர்வத யோகம்

யோகம் : லக்கினாதிபதியும் பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் ஒருவர்க்கொருவர் கேந்திரத்தி−ருந்தால். நீங்கள் தர்ம சிந்தனை, தயாளகுணம், மற்றும் நகைச்சுவை உணர்வுள்ள மனிதராவீர்கள். உங்களுடைய செயல்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். ஒரு நிறுவனத்திற்கோ கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ தலமையாளராக வருவீர்கள்.

பரிவர்த்தனை யோகம்


பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்! "Parivartthanai means Planet-A occupies the sign of Planet-B while simultaneously Planet-B occupies the sign of Planet-A. Example: Moon occupies Jupiters (குரு) house and Jupiter (குரு) occupies moons house

இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும். Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two graha involved. Increasing the power of these two bhava and these two graha may be helpful for the success of the native. அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும் எப்படி? வாருங்கள். அதைப்பார்ப்போம்.

அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும் ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results.

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும். பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும். If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned. If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce.

இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.

1.தைன்ய பரிவர்த்தனை. தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும். This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its interaction with the other non-dushthana partner.

2. கஹல பரிவர்த்தனை! மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும். மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும். Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done.

3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும். When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved.

பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு. தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும். உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம். இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும். ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.

2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். 6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும். 2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான் 1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான். 1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான். 9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு! This type of parivarththanai yoga will confer high position, reputation, fameand power. Shukra-Kuja exchange If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. (எச்சரிக்கை: இது பொது விதி) அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா? எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-))))) பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும்.

இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன். கீழே உள்ளது. அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார். இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை Indira GANDHI, born on November 19, 1917 at 11:11 PM in Allahabad

1 & 7ஆம் வீடுகளில் சந்திரனும், சனியும் பரிவர்த்தனை. 2 & 5ஆம் வீடுகளில் சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை. 6 & 11ஆம் வீடுகளில் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை.

பாப கர்த்தாரி யோகம்


பாப கர்த்தாரி யோகம்! தமிழில்: கத்திரி யோகம்! கர்த்தாரி என்னும் வடமொழிச்சொல்லிற்கு வெட்டுக் கத்தி என்று பெயர். அப்படியுள்ள இரண்டு கத்திகளை ஒன்று சேர்த்தால் அது கத்திரிக்கோல் ஆகிவிடும். Kartari (Sanskrit) = chopper பாபகர்த்தாரி யோகம் என்பது, கத்தரிக்குள் மாட்டிக்கொண்ட யோகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கத்திரிக்குள் (scissors) மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? வெட்டுப்பட்டுப் போகும். வெட்டுப்படுதலில் தீயதும் நடக்கும். நல்லதும் நடக்கும். நல்லதா? ஆமாம் சாமி துணி வெட்டுப்பட்டுதானே நீங்கள் அணிந்து கொள்ளும் சட்டையாக மாறுகிறது? ஆகவே இந்த யோகத்தில், அதிகமாகத் தீமையே உண்டு. சில நேரங்களில், சில அமைப்புக்களால் நன்மையும் உண்டு.

எப்போது உண்டாகும்? இரண்டு தீய கிரகங்கள் ஒரு வீட்டின் இரு பக்கமும் அல்லது ஒருகிரகத்தின் இருபக்கமும் அமர்ந்திருந்தால் அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்! It occurs when malefics enclose a planet or a house. Kartari means scissors, and papa means sin. This is also called hemmed in. This yoga is caused by planets being placed around a certain house and/or planet. The most generally occurring scissors yoga is when two benefics or malefics enclose a planet or a house. பலன்: நடுவில் மாட்டிக்கொண்ட வீட்டின் பலன்கள் கெடும் அல்லது பலன்கள் அநியாயத்திற்குத் தாமதமாகும்.

உதாரணத்திற்கு, 7ஆம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்தால், ஜாதகனின் திருமணம், தள்ளிக் கொண்டே போகும். ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்புக்கள் இல்லாமலிருந்தால், திருமணமே நடக்காமல் போய்விடும் அபாயமும் உண்டு. அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியில்லாமல் இருக்கும். இதே அமைப்பு 10ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், அதாவது பத்தாம் வீட்டின் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலும், ஜாதகனுக்கு வேலை கிடைக்காது. கிடைத்தாலும் திருப்தியிருக்காது. அவதியாக இருக்கும். இந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அப்படியே அந்த வீட்டிற்கான பலாபலன்கள் கெடும். அவை என்னவென்று சம்பந்தப்பட்ட அந்த வீட்டை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 4 என்றால் கல்வி, 5 என்றால் குழந்தைபாக்கியம் இப்படி.....!

இதே அமைப்பில் சிலருக்கு நன்மையும் கிடைக்கக்கூடும்! அது என்ன? ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும். வெட்டுப்பட்ட துணி சட்டையாக உரு மாறுவதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்கள்

தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்: சனி, செவ்வாய், ராகு, கேது & சூரியன் The malefic planets are Saturn, Mars, Rahu, Ketu and Sun. நன்மைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்: குரு, சந்திரன், சுக்கிரன் & புதன் The benefic planets are Jupiter, Venus, and Mercury.

உதாரணங்கள்:

1. ரிஷபத்தில் சுக்கிரன். அதன் பின்னால் மேஷத்தில் சனி, அதற்கு முன்னால் மிதுனத்தில் செவ்வாய் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அது ரிஷப வீட்டிற்குப் பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுக்கும். கொடுத்தால் என்ன ஆகும்? சுக்கிரனால் சரிவர இயங்க முடியாது. ஜாதகனுக்கு உரிய பலனைத் தரமுடியாது. ஜாதகன் காசு இருந்தும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருப்பான். சுகங்களை அனுபவிக்க முடியாது. (கத்திரியைக் கீழே வையுங்கள்: இது பொதுப்பலன்)

2. இதைப்போல ஐந்தாம் வீட்டின் இருபுறமும் இரு தீய கிரகங்கள். ஐந்தாம் வீட்டில் எந்தகிரகமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அமைப்பு ஜாதகனின் குழந்தைகளைப் பாதிக்கும். அதாவது ஜாதகன் தன்னுடைய குழந்தைகளால் அவதிப் படுவான் அல்லது குழந்தை இல்லாமல் அவதிப்படுவான் (எச்சரிக்கை: இதுவும் பொதுப்பலன்)

இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் லக்கினம் மாட்டிக்கொண்டு விட்டால், ஜாதகன் குணக்கேடு உடையவனாக இருப்பான். அதனால் பல சிக்கல்களை அவன் எதிர்கொள்ள நேரிடும்.

அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம

1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது தொழில செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில் இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.

2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்வான்.

3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.

4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில் பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.

பாலஅரிஷ்டம்


அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும். உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்

அரிஷ்ட யோகம் 1 (அவயோகம்தான்) தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு! 1 லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga: The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)

2. எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான். Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe). Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).

பாஸ்கரா யோகம்


பாஸ்கரா யோகம் இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும். புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன்.

புத ஆதித்யா யோகம்


புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!

பலன்: ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். This yoga will give lots of talent, success, honour and fame in society.

எல்லோருக்கும் கொடுக்குமா? கொடுக்காது. ஏன் கொடுக்காது?

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது

The Sun & Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart

சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு) மேஷம் (சூரியனின் உச்ச வீடு) மிதுனம் (புதனின் ஆட்சி வீடு) கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு) ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்! மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால

மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது ரிஷப, சிம்ம, துலா & மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்

புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

மகாபாக்கிய யோகம்


ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு. பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்

பெண்களுக்கு: இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு. இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு. இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்

பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்! Mahabhagya Yoga for Men - in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women - night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.

”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள். பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம்.

மாமனித யோகம்


மாமனித யோகம்! மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம். அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை! கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்

வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

1 ருச்சகா யோகம்: செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

2 பத்ரா யோகம்: புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

3
ஹம்ஸ யோகம்


ஹம்ஸ யோகம்: குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house - religious, very fortunate.

4 மாளவ்ய யோகம்: சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. 
5 சஷ்ய யோகம்: சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.

பலன்: இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்! This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!

மாளவ்ய யோகம்


சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

என்ன பலன்? ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன். நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு உடையவானாக இருப்பான். செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான். வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும், ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான். Marriage is only a part of the life.Not the whole life Please keep that in your mind! மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன். அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ, அவன் எல்லோரையும் விரும்புவான்! கீழே உள்ளது நமது தூத்துக்குடி முருகா’ விற்காக சுருக்கமாக ஆங்கிலத்தில்: Malavaya yoga: Venus in its own sign or in exaltation, and in a kendra house - wealthy, loves life, sometimes self-indulgent, good marriage, strong sense of justice.

ராஜயோகம்


யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும். ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள் ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு! அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty) ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன

1. தன ராஜயோகம் (yogas for wealth)

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame)

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம் அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள் ------------------------------------------------------

1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும்

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள் பணம், புகழ், மதிப்பு, மரியாதை & செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம். இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள். Navamsa is 1/9 th division of a Rasi Chart. In short it is the magnified version of the Rasi Chart! அவை எல்லாவற்றையும் விட முக்கியம். ஜாதகத்தில் லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும். வலு என்பது சூப்பர் சுப்பராயன் போன்ற உடல் வலு அல்ல! லக்கின அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது தனது பார்வையால் லக்கினத்தைத் தன் கையில் வைத்திருக்க வேண்டும். குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்கினம் அவர்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். Lagna is deemed to be strong only when it is aspected or occupied by its own lord, Jupiter or Mercury and not by other planets

ருச்சகா யோகம்


ருச்சகா யோகம்: செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்

லக்ஷ்மியோகம்


லக்ஷ்மியோகம் எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன் ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன? லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும் இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து இருக்கலாம் If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own or exaltation sign identical with a Kendra or Thrikona, Lakshmi Yoga is caused.

பலன் என்ன? பலன்

1 ஜாதகன் அழகாக இருப்பான். பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக் கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும் உதாரணமாகச் சொல்லவில்லை)

2 ஜாதகன் செல்வத்தோடு இருப்பான். உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான். நன்கு கற்றவனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான். நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு!

The person will be wealthy, noble, learned, a man of high integrity and reputation, handsome appearance, a good ruler, and enjoying all the pleasures and comforts of life.

பலன் எப்போது? லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக் காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும் மேலதிகத்தகவல்கள்:

Different definitions of the Lakshmi Yoga. Lakshmi Yoga will arise by the mutual association of lords of Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra, Thrikona, or exaltation and the lord of Lagna being disposed powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited in own or exaltation places which should be Kendras or Trikonas. Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna, Venus, and the lord of the 9th. Lakshmi has predominantly to do with wealth and one born in this combination will be wealthy, the degree of wealth varying with regard to the degree of strength or weakness of the planets causing the Yoga. The most powerful type of Lakshmi Yoga will give immense wealth, while the mutual association of or aspect between the lords of Lagna and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence of other Dhana Yogas

அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது! பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம். பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள் பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள் ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337 மட்டுமே. அதை மனதில் வையுங்கள் லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார் அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத் தெரியும்.

வஞ்சன சோர பீதி யோகம்


வஞ்சன சோர பீதி யோகம்! பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள். Vanchana Chora Bheethi Yoga vañchana — cheating chora - thief bheethi - fear ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம்.

The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients.

லக்கின அதிபதி ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம் உண்டு! உண்டு! உண்டு! அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன் கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும் பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான்.

The Lagna lord is with Rahu, Saturn or Ketu Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed. அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான். In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses.

விபரீத ராஜ யோகம்

யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்றொரு இடத்தில் இருந்தால் அது ஒரு யோகம் என்று சொல்வார்கள்.
உதாரணத்திற்க சந்திரனுக்கு 4ல், 7ல், 10ல் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் எனப்படும். 6க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு. கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது.
 
குறிப்பாக கன்னி, ரிஷபம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த ராகு, கேது பெயர்ச்சியால் விபரீத ராஜ யோகம் ஏற்படும்.
ராஜ யோகம் என்றால் சொத்து, பதவி போன்றதா?எதிர்பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ராஜ யோகம். நாம் அந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை ராஜ யோகம் என்று சொல்லலாம்.யோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்?அதாவது நமக்கு வாழ்க்கையில் கிட்டும் ஒரு நன்மையை யோகம் என்று சொல்கிறோம். அதாவது அதிர்ஷ்டம். யோகம் என்பது ஒரு வித நன்மைக்கான அறிகுறி. கிரகங்களின் மூலமாக மனிதர்கள் பெறக்கூடியது. யோகம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் யோகம் என்ற வார்த்தைக்கு முன்னால் வரும் வார்த்தையை வைத்துத்தான் அதனைக் கூற முடியும்.யோகம் என்றாலே நன்மைதான் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதாவது தரித்தர யோகம் என்று கூட ஒன்று உள்ளது. ராஜ யோகம் என்று சொல்லும்போது பலர் வணங்கக் கூடிய மாமனிதனாவான் என்று சொல்வார்கள். ராஜ யோகம் என்பது எந்த கிரக அமைப்பைப் பொறுத்தது?எல்லா லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் இன்னன்ன இடத்தில் சேர்ந்திருந்தால் விபரீத ராஜ யோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
உதாரணத்திற்கு, மிதுன லக்னத்தை எடுத்துக் கொண்டால் “சந்திரனும் புதனும் சேர்ந்தால் இந்திரனைப் போல வாழ்வான்” என்று சொல்வார்கள். 
துலாம் லக்னத்திற்கும் சந்திரனும், புதனும் சேர்ந்தால் இந்திரன் போல் வாழ்வான் என்று சொல்வார்கள்.துலாம் லக்னத்திற்கு புதன் பாக்யாதிபதி, சந்திரன் ஜீவனாதிபதி. பாக்யாதிபதியும், ஜீவனாதிபதியும் ஒன்று சேரும்போது இந்திர பாக்கியம் கிட்டும்.
 
ஒவ்வொரு லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் பாவத்தைத் தரும், இன்னன்ன கிரகங்கள் யோகத்தைத் தரும். 
தரித்திர யோகம் என்பது என்ன?
 

இடையூறுகளைத் தரக்கூடியதுதான் இந்த தரித்திர யோகம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen