Donnerstag, 19. Juni 2014

Moon in trikonal to Sun

பாரப்பா யின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கே வேட்டலுண்டு கிரகமுண்டு ஆரப்பா அமடுபய மில்லையில்லை அர்த்தராத் திரிதனிலே சப்தம்கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிப்பாய் சொல்லே இன்னுமொரு முக்கியமான செய்தியினையும் நான் கூறுகிறேன். இதனையும் நீ நன்குணர்ந்து ஆராய்ச்சி அறிவுடன் கொள்வாயாக! பிரசித்தி பெற்ற சூரிய பகவானுக்கு திரிகோண ஸ்தானத்தில் (1,5,9 ஆகிய இடங்களில்) அமிர்த கலையுள்ள சந்திரன் பலமுற்ற அச்சாதகனுக்கு பலவிதத்தாலும் செல்வங்கள் சேருமென்றாலும், அரிஷ்டமும் உண்டு. எனினும் காக்கும் கோள் உண்டாதலின் அதனால் குறையொன்றும் இல்லவே இல்லை. நடு நிசியில் சப்தங்களைக் கேட்பவானாக இருப்பான். அச்சாதகனுக்கு 78-ஆம் வயதில் கூற்றுவனார் வருவார் என்பதனை ஏனைய கிரகங்களையும் எண்ணி உன் குறிப்பைச் சொல்வாயாக.

Keine Kommentare:

Kommentar veröffentlichen