Sonntag, 11. November 2012

Pulippani-சரராசி -Aries-Cancer-Libra-capricorn







சூடப்பா சரராசி செனித்தபேர்க்கு சுகமில்லை லாபாதி பதியினாலே ஆடப்பா அகம்பொருளும் நிலமும்சேதம் அப்பனே அரசரிட தோஷமுண்டாம் தேடப்பா திரவியமு மளித்தாரானால் திடமான அரிட்டமடா தேடமாட்டான் வீடப்பாகோணத்தில் லிருக்கநன்று விளம்பினேன் புலிப்பாணி வினையைப்பாரே


 -விளக்க உரை- சரராசியில் பிறந்த ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்திற்கதிபதியான லாபாதிபதியாலே சுகமில்லை. ஏனெனில் அவனது பொசிப்பு காலத்தில் மனையும், பொருளும், நிலமும் சேதமாவதுடன் மன்னராலும் தோடம் ஏற்படும். அவ்வாறன்றி நிறைந்த செல்வத்தை ஒருவேளை அளித்தாலும் கூட நோயுபாதை போன்ற அரிட்டங்களையும் தருவார். ஆனால் அவனால் நிறை தனம் தேட இயலாது. ஆயினும் திரிகோண ஸ்தானத்தில் (1,5,9) இருந்தால் நன்மையான பலன்களையே தருவேன் என்று புலிப்பாணி போகரருளாணையால் கூறினேன். 








 சரம் என்பது நகரும் தன்மையை குறிக்கும். ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும். உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும். மேஷம் முதல் துவங்கி ஒவ்வொரு ராசியாக இந்த மூன்று தன்மைகள் நான்கு முறை வரும். [3X4 = 12].



 மேற்கண்ட ராசி தன்மையை பலவிதமான பலன் சொல்லுவதற்கு பயன்படுத்தலாம். உதாரணமாக ஒருவரின் தொழில் பற்றி ஆராயும் பொழுது , ஜாதகரின் தொழிலை கொடுக்கும் கிரகம் சர ராசியில் இருந்தால், மார்கெட்டிங் சார்ந்த தொழில் செய்வார் என சொல்லலாம். காரணம் அவரின் தொழில் தன்மை ஓர் இடத்தில் இருந்து செயல்படும் நிலையில் இருக்காது. ஸ்திர ராசி சம்பந்தம் இருந்தால் ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருப்பார். அரசு அதிகாரிகள் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
 உதாரணத்தை பார்த்தவுடன் உங்கள் ஜாதகத்தை எடுத்து ஆராய வேண்டாம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் எல்லாம் சர தன்மையில் வேலை செய்வார்கள் என முடிவுக்கு போக வேண்டாம். மேலே உதாரணத்தில் “தொழிலை கொடுக்கும் கிரகம்” என கொடுத்திருக்கிறேன் அல்லவா? ஒருவர் ஜாதகத்தில் தொழிலை கொடுக்கும் கிரகம் எது என தேர்ந்தெடுப்பது பின்னால் உங்களுக்கு கூறுகிறேன். தற்சமயம் ராசியின் தன்மையை மட்டும் கற்றுக்கொள்ளலாம்.
 சர ஸ்திர உபய ராசிகளின் தன்மைகளை ஆயுள் அறிய, காணாமல் போனவரை கண்றிய என பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen