Mittwoch, 7. November 2012

Horas ஹோரை - ஓரை

 அன்றாட நடைமுறையில் , இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும். ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.  




ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.சரியான ஓரை கணிப்பதற்கு www.mypanchang.com  



இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை,   8-9 மணி வரை புதன் ஓரை,          9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.



இந்த ஒரைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் நல்லவை அல்ல.
சூரிய ஓரை ; இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழு,பெரியோர்களைஸ் சந்திக்க நல்லது.


சந்திர ஓரை ; இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
செவ்வாய் ஓரை ;எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
புதன் ஓரை ; கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
குரு ஓரை ;எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னலே போதுத் உடனே கிடைதிதுவிடும்.
சுக்கிரஓரை ; சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
சனி ஓரை ;எந்தவித சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் நிலபுலங்கள் பற்றி பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது.இந்த ஓரையில் காணாமல் போன பொருள் கிடைக்காது.ஒருவேளை இரண்டு மூன்று வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம்.











Keine Kommentare:

Kommentar veröffentlichen