Donnerstag, 19. Juni 2014

Kethu in 4th House

கேளப்பா இன்னமொரு புதுமைகேளு கெடுதிசெய்யும் செம்பாம்பு நாலில்நிற்க சீளப்பா ஜெனித்தமனை சுத்தபாழாம் சென்மனுக்கு கிரகமுண்டு விதியும்கூறு கூளப்பா குளிகனுமோ சேர்ந்து நிற்க குடியிருக்கக் குச்சில்லை கறவையில்லை ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம் அத்திடலில் அரவுக்கு சாந்திசெய்யே அப்பனே இன்னுமொருபுதுமையினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! தீமையையே செய்யும் செம்பாம்பு எனக் கூறப்படும் கேது பகவான் நான்காம் இடத்தில் நிற்க அந்த சென்மன் உதித்த மனைபாழாகிப் போகும். அவனுக்கு தீக்கோள் தோஷமுண்டு. அவனது விதியையும் கிரகபலம் அறிந்து கூறுக. அவனுடன் மாந்தியும் கூடிநிற்பின் குடியிருக்க வீடோ கன்று காலிகளோ அவனுக்கில்லை. அவனது அன்னைக்கும் தோஷம் உண்டாம் என்று கூறுவதுடன் நாக தோஷப் பரிகாரம் செய்வது சிறப்பாமென்று போகமா முனிவரது பேரருளினால் புலிப்பாணி கூறினேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen