Donnerstag, 19. Juni 2014

Moon in 1-6-8

அரைந்திட்டே னின்ன மொன்று அன்பாய்க்கேளு அம்புலியும் ஆறெட்டு லெக்கினத்தில் குரைந்திட்டேன் கொடியோர்கள் கூடிநோக்க கூற்றுவனார் தந்திடுவர் சிசுவைப்பற்றி திரந்திட்டேன் திங்களொரு மூன்றுக்குள்ளே திடமான அரிட்டமடா பத்துநாளில் பரைந்திட்டேன் பாலனுக்கு விதியோ அற்பம் பண்பாக புலிப்பாணி உரைத்தேன்பாரே. போகமா முனிவருடைய கருத்தினை அன்பினால் கூறுகிறேன். அதனையும் நீ ஆராய்ச்சி பூர்வமாகக் கேட்பாயாக! இலக்கினத்திலும், ஆறிலும், எட்டிலும் சந்திரன் நிற்க அச்சந்திரனைக் கொடியவர்கள் கண்ணுற்றுப்பார்த்தால் கூற்றுவன் அச்சிசுவினைப்பற்றி மூன்று மாதத்திற்குள் குறிப்பாகப் பத்து நாள் அதிக அரிஷ்டமுண்டாகும், அச்சாதகனுக்கு விதி வெகு அற்பமென்று போகரது கருணா கடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன். இந்தக் கருத்தினையும் நீ உணர்ந்து நோக்குக.

Keine Kommentare:

Kommentar veröffentlichen