Donnerstag, 19. Juni 2014

Ascendantlord is Sun

கூரப்பா கதிருக்கு கணேசன் சக்தி கொற்றவனே அம்புலிக்கு ருத்திரன் மாரி ஆரப்பா வெகுபேர்க்கு அமுதளிப்பன் அப்பனே அன்னசத் திரமுங்கட்டி பாரப்பா பகைவர்களும் கண்ணுற்றாலும் பலன்குறைந்துபோகாது விதியும் தீர்க்கம் கூரப்பா போகருட கடாட்சத்தாலே கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே. இலக்கினாதிபதி கதிரோனாகிய சூரியனாகில் கணேசருக்கும். சக்திக்கும் சந்திரனாகிய ருத்திரன் கெளமாரி ஆகியோருக்கும் கோயில் திருப்பணி செய்வதுடன் வெகுபேர்க்கு அன்னமளிப்பதுடன் அன்ன சத்திரமும் கட்டி ஆதரிப்பான். இச்சாதகனின் 4,10க்குடையோர் கூடிய ஸ்தானத்தை பகைக்கிரகங்கள் பார்வையிட்ட போதும் இவனுக்குப் பலன்கள் குறையா.தீர்க்க ஆயுளே பெறுவான். இதனையும் எனது சற்குருவான போகமா முனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

Moon in 1-6-8

அரைந்திட்டே னின்ன மொன்று அன்பாய்க்கேளு அம்புலியும் ஆறெட்டு லெக்கினத்தில் குரைந்திட்டேன் கொடியோர்கள் கூடிநோக்க கூற்றுவனார் தந்திடுவர் சிசுவைப்பற்றி திரந்திட்டேன் திங்களொரு மூன்றுக்குள்ளே திடமான அரிட்டமடா பத்துநாளில் பரைந்திட்டேன் பாலனுக்கு விதியோ அற்பம் பண்பாக புலிப்பாணி உரைத்தேன்பாரே. போகமா முனிவருடைய கருத்தினை அன்பினால் கூறுகிறேன். அதனையும் நீ ஆராய்ச்சி பூர்வமாகக் கேட்பாயாக! இலக்கினத்திலும், ஆறிலும், எட்டிலும் சந்திரன் நிற்க அச்சந்திரனைக் கொடியவர்கள் கண்ணுற்றுப்பார்த்தால் கூற்றுவன் அச்சிசுவினைப்பற்றி மூன்று மாதத்திற்குள் குறிப்பாகப் பத்து நாள் அதிக அரிஷ்டமுண்டாகும், அச்சாதகனுக்கு விதி வெகு அற்பமென்று போகரது கருணா கடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன். இந்தக் கருத்தினையும் நீ உணர்ந்து நோக்குக.

Moon in trikonal to Sun

பாரப்பா யின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கே வேட்டலுண்டு கிரகமுண்டு ஆரப்பா அமடுபய மில்லையில்லை அர்த்தராத் திரிதனிலே சப்தம்கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிப்பாய் சொல்லே இன்னுமொரு முக்கியமான செய்தியினையும் நான் கூறுகிறேன். இதனையும் நீ நன்குணர்ந்து ஆராய்ச்சி அறிவுடன் கொள்வாயாக! பிரசித்தி பெற்ற சூரிய பகவானுக்கு திரிகோண ஸ்தானத்தில் (1,5,9 ஆகிய இடங்களில்) அமிர்த கலையுள்ள சந்திரன் பலமுற்ற அச்சாதகனுக்கு பலவிதத்தாலும் செல்வங்கள் சேருமென்றாலும், அரிஷ்டமும் உண்டு. எனினும் காக்கும் கோள் உண்டாதலின் அதனால் குறையொன்றும் இல்லவே இல்லை. நடு நிசியில் சப்தங்களைக் கேட்பவானாக இருப்பான். அச்சாதகனுக்கு 78-ஆம் வயதில் கூற்றுவனார் வருவார் என்பதனை ஏனைய கிரகங்களையும் எண்ணி உன் குறிப்பைச் சொல்வாயாக.

Mars in 2nd House

பாடினே னின்னமொரு புதுமைகேளு பலமான செவ்வாயும் துதியில் நிற்க கூடினேன் கிரகத்தில் வழக்கும் போரும் குமரியவள் கணவனையும் கருதிப்பாராள் தேடினேன் தையலுமோ மாண்டாளானால் தனம்விரயம் சஞ்சலமும் அழுதுமாய்வன் ஆடினேன் ஆடவர்கள் அழுதகூலி அவல்கடலை அவர்மடியில் போடுவாரே. நான் கூறுகின்ற இன்னொரு புதுமையும், நீ கேட்பாயாக! ஸ்தான பலமிக்க செவ்வாய் இரண்டாம் இடத்தில் நிற்க அச்சாதகனின் மனையில் அனுதினமும் போர் நிகழும். காரணம் மனைவி அவனைக் கருதிப் பாராதவளாக இருப்பாள். ஆயினும் அவள் மடிந்தாளேயானால் தனம் விரயமாதலும், மனோ வியாகூலமும், அடைந்து அழுகையினால் அச்சாதகன் மாய்வான் என்றே கூறுவேன். ஆடவர்கள் அழுத கூலிக்காக அவலையும் கடலையையும் அவர்தம் மடியில் போடுவார் என்று போகர் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

Kethu in 4th House

கேளப்பா இன்னமொரு புதுமைகேளு கெடுதிசெய்யும் செம்பாம்பு நாலில்நிற்க சீளப்பா ஜெனித்தமனை சுத்தபாழாம் சென்மனுக்கு கிரகமுண்டு விதியும்கூறு கூளப்பா குளிகனுமோ சேர்ந்து நிற்க குடியிருக்கக் குச்சில்லை கறவையில்லை ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம் அத்திடலில் அரவுக்கு சாந்திசெய்யே அப்பனே இன்னுமொருபுதுமையினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! தீமையையே செய்யும் செம்பாம்பு எனக் கூறப்படும் கேது பகவான் நான்காம் இடத்தில் நிற்க அந்த சென்மன் உதித்த மனைபாழாகிப் போகும். அவனுக்கு தீக்கோள் தோஷமுண்டு. அவனது விதியையும் கிரகபலம் அறிந்து கூறுக. அவனுடன் மாந்தியும் கூடிநிற்பின் குடியிருக்க வீடோ கன்று காலிகளோ அவனுக்கில்லை. அவனது அன்னைக்கும் தோஷம் உண்டாம் என்று கூறுவதுடன் நாக தோஷப் பரிகாரம் செய்வது சிறப்பாமென்று போகமா முனிவரது பேரருளினால் புலிப்பாணி கூறினேன்.

தன கர்மாதிபதி 2nd und 10th lord


செய்யப்பா யின்னமொரு சேதிகேளு செயலாக நிதிகரும னிருவர்கூடி கையப்பா கண்ணுற்று நோக்கினாலும் கனமுள்ளோ ரிருவருமே மாறினாலும் அய்யப்பா அகம்பொருளும் நிலமுஞ்செம்பொன் அப்பனே கிட்டுமடா ஜென்மனுக்கு உய்யப்பா போகருடா கடாசத்தாலே உத்தமனே புலிப்பாணி உரைத்தோம்னமே சீர்த்தி மிகுந்தவனே, நீ இன்னுமொரு சேதியினையும் கேட்பாயக! இரண்டிற்குடையவனும் பத்துக்குடையவனும் கூடி இருப்பினும் அல்லது ஒருவரை ஒருவர் கண்ணுற்று நோக்கினாலும் அல்லது இவன் வீட்டில் அவனாக மாறி நிற்பினும் அச்சாதகனுக்கு அகமும், பொருளும், நிலமும், செம்பொன்னும் வெகுவாகக் கிடைக்கும். போகருடைய கடாட்சத்தால் உய்க என்றே அவருடைய மாணாக்கனாகிய புலிப்பாணி உரைத்தேன். 

6th lord & 3rd lord in one

அரைந்திட்டே னின்னமொரு சேதிகேளு அப்பனே ஆறோனும் மூன்றோனின்மேல் திரந்திட்டேன் தேசத்துக்குக் கள்ளர்நாட்டை தீயாலேகொளுத்திடுவன் சினமுள்ளோன் உரைத்திட்டேன் உள்நாட்டு கள்ளர்கண்டால் உள்ளபடி ஆக்கினையை விதிப்பவன் கான் பரைந்திட்டேன் படையாட்சி ஆள்கள்மெத்த பன்பாக புலிப்பானி அரைந்திட்டேனே இன்னுமொரு சேதினையும் நான் கூறுகிறேன் கேட்பாயாக! ஆறுக்குடையோனும் மூன்றுக்குடையோனும் கூடினால் அவன் மிகப் ¦ப்ரும் வீரனாக விளங்கினால் தீய கள்ளர்தம் தேசத்தைத் தீயாலே கொளுத்துகின்ற அளவுக்கு சினமுடைய வனாக இருப்பான். இன்னும் மறைமுக எதிரிகள் உண்டானால். அவர்களுக்கு முறைப்படி ஆக்கினைகள் விதிப்பான். இச்சென்மன் மிகப்பெரும் வீரனென்றும் குடி, படை கொண்டு செலுத்தத் தக்கவன் என்றும் இவனுக்கு நிறைந்த ஆள்பலம் உண்டென்றும் போகரது அருளால் புலிப்பாணி கூறினேன். `