செப்புவாய் உபயத்தில் செனித்தபேர்க்கு சிறந்ததொரு சப்தமனு மாகாதாப்பா ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த ஊழ்வினையைத் தடுபாரு முலகிலுண்டோ தப்புவாய்திடல் நாசம் தனமும் நாசம் தார்வேந்தர் பகையுமுண்டு தேகதுன்பம் இப்புவியில் போகருடன் கடாஷத்தாலே இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே.
-விளக்க உரை- உபயராசியில் ஜனித்த ஜாதகருக்கு சப்தம கேந்திராதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். அதனால் அவனியில் மிகுந்த அவதியுண்டாகும். ஊழ்வினைத் தடுக்கவல்லவர் உலகில் யாரே உளர்? (இல்லையன்றோ) கிடைக்கத் தக்க வருவாய் கிடைக்காமல் போதலும் தொழில் நாசமும், தன நாசமும், அரசர் பகையும் தேகத்தில் நோய் உபாதைகள் ஏற்படுதலும் நேரும். எனினும் கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்தறிந்து என் சற்குருவான போகர் அருளாணையாலே நான் கூறும் கருத்தினை திசாபுக்தி தெரிந்து கூறுவாயாக.
Keine Kommentare:
Kommentar veröffentlichen