Sonntag, 11. November 2012

லக்கினம் கண்டுபிடிப்பது

லக்கினம் கண்டுபிடிப்பது எவ்வாறு

உதாரணமாக  குழத்தை ஜெர்மனிஜில் Wuppertal  நகரில் விடியட்கலை 1,04am  பிறப்பின். Date 21.06.1986 எவ்வாறு அமையும் .

இராசி சக்கரத்தை உருவாக்கிகொள்வம்.

பன்னிரு ராசிகளும் கால நிலையையும் மாதங்களையும் குறிக்கிறது. ராசி மண்டலம் 360 பாகை கொண்டது என நாம் படித்தோம். சூரியன் தினமும் ஒரு பாகை வீதம் 360 டிகிரியை 365.25 நாட்களில் சுற்றிவருகிறார்.

சூரியன் ஒரு டிகிரி செல்ல ஒரு நாள் எடுத்துகொள்வதால், ஒரு ராசியை முப்பது நாட்களில் கடந்துவிடுவார். ஆக ஒரு வருடம் என்பது சூரியன் பன்னிரு ராசியை 365.25 நாட்களில் சுற்றிவருவதை பொருத்து அமைகிறது.
   ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷம் முதல் நாட்களும் மாதங்களும் துவங்கும். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகள் சித்திரை முதல் மீனம் வரை உள்ள மாதங்களை குறிக்கும். சூரியன் மேஷ ராசியில் முதல் பாகையில் சென்றால் அன்று சித்திரை ஒன்றாம் தேதியாகும். மேஷ ராசியில் 15 டிகிரி சென்றால் அன்று சித்திரை 15ஆம் தேதி. எளிமையாக சொல்ல வேண்டுமானால் சூரியன் இருக்கும் பாகைதான் நமக்கு தேதியாக இருக்கும்.
ஒருவர் ஜூன் 21ஆம் திகதி பிறக்கிறார் என்றால், ஆனி மாத்தில் சூரியன் மிதுனம் ராசியில் இருக்கும்.


ராசி நிலையில் நேரங்கள் :

சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகை செல்லுவதாக சொன்னேன். ஒரு நாள் என்பது ஒரு மாதம் மற்றும் வருடம் உருவாக காரணமாக இருக்கிறது.

 
நாள் எப்படி காரணியாக இருக்கிறதோ அது போல நேரம் ஒரு நாள் உருவாக காரணமாகிறது. 24 மணி நேரத்தில் பூமி தன்னை தானே சுற்றுவதை ஒரு நாள் என்கிறோம். எனவே ஒரு ராசிக்கு இரண்டு மணி நேரம் வீதம் பன்னிரெண்டு ராசிகளில் நேரம் ஒரு நாளில் பயணிக்கும்.
( 24 மணி நேரம் / 12 ராசிகள் = 2 மணி நேரம்).

தினமும் நேரம் சூரியன் இருக்கும் ராசியில் தான் துவங்கும். உதாரணமாக சித்திரை மாதம் ( ஏப்ரல் 14 முதல் மே 15) காலை 5.30 மணி மேஷ ராசியில் துவங்கும். 5.30 என்பது இந்திய தேசிய மணி. ( IST)

 காலை 5.30 துவங்கி 7.30 வரை இரண்டு மணி நேரம் , நேரமானது மேஷ ராசியில் பயணிக்கும். 7.30 முதல் 9.30 வரை ரிஷபம் என இரண்டு இரண்டு மணி நேரமாக பன்னிரு ராசிகளை 24 மணி நேரத்தில் நேரமானது கடக்கும்.

மேலே நேரம் என நான் சொன்னதை வடமொழியில் எளிமையாக லக்னம் என சொன்னார்கள். லக்னம் என்பது ராசிநிலையில் நேரம் காட்டும் குறியீடு என அறிக. மிகவும் குழப்பிக்கொள்ள வேண்டாம். 
லக்ன ஓட்டத்தையும் சூரியனின் மாற்றத்தையும் எளிமையாக நினைவில் வைக்க கடிகார முள் சிறந்த உதாரணம். லக்னம் எனும் பெரிய முள் ராசி மண்டலத்தை 30 முறை சுற்றினால், சூரியன் எனும் சின்ன முள் ஒரு ராசி நகரும். எந்த வருடமானாலும் லக்னம் மற்றும் சூரியனின் இந்த மாற்றம் நிலையானது.


நாம் எடுதுக்கொண்ட இடம்  Wuppertal. சூரிய உதயம் 5,21 Am (www.mypanchang .com)
மிதுனம் ராசியில் .  எனவே லக்னம்  எந்த ராசியில் இருக்கும்?

3,21 Am-5.21Am   ரிஷபம்
1.21 Am -3.21Am  மேஷம்
11.21Am -1.21Am மீனம்       எனவே குழந்தையின் லக்னம் மீனம் ஆகும்.
ஆனால் ஜாதகம் online கணிக்கும் போது வெவ்வேறு லக்கினம் வருவதை காணலாம். காரணம் ஒவ்வொரு வீடும் வித்தியாசமான நேரம் ஆகும்.
house:                   Duration:
 Mesha                 1hr 36 min
Libra                    2 hr  6 min
Vrishaba               1hr 48 min
Scorpio                3hr  12 min
Mithuna                2hr  6 min
Dhanus                 2hr 12 min
Kataka                 2hr  12 min
Makara                2hr 6 min
Simha                   2hr 6 min
Kumba                 1hr 46 min
Virgo                    2hr 6 min
Meena                  1hr 36 min    
















Keine Kommentare:

Kommentar veröffentlichen