வர்கோத்தமம்! வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்! சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார் உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்!
An ordinary bus will become a double decker bus!
பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்:
சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.
சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்
செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்
புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.
குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்
சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்
சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்
ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான். இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும்,
பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!
|
அனபா யோகம்
சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம்
பொதுப்பலன்: ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான் சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்
Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous, virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.
தனிப் பலன்கள்
1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன்.
2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான்.
3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான்.
4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான்
5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். (ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்)
மொத்ததில் இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும், நல்ல பண்புகளையும், சுய மரியாதையையும் கொடுக்கும்
|
அமரக் யோகம் |
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்
பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள். அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
|
அமலா யோகம் |
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.
யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு
பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.
|
அரிஷ்ட யோகம் |
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும். |
யோகத்தின் பெயர்: அரிஷ்ட யோகம்: அதற்கான கிரக அமைப்பு: பல அமைப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புக்களில் ஒன்று இருந்தாலும் ஜாதகத்தில் உள்ள நல்ல தன்மைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜாதகனுக்குப் பலவிதமான சிரமங்களை அது கொடுக்கும். தெரிந்தவரை சில அமைப்புக்களைக் கொடுத்துள்ளேன்.
1. 6, 8, 12ஆம் வீட்டுடன் அல்லது அதன் அதிபதியுடன், சேர்க்கை அல்லது பார்வையில் தீய கிரகங்கள் கூட்டு வைத்திருப்பது (Malefic associated with the 6th, 8th and 12th houses or their lords) அதாவது குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் 6, 8, 12ஆம் வீட்டு அதிபதிகளாக இருந்து அந்த வீட்டை, சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஒன்று சேர்க்கை அல்லது பார்வையில் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது.
2. நீசமாக உள்ள அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3ம் அல்லது அதற்குக் கீழாகவும் பெற்றுள்ள சந்திரன் தீய கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
3. ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தால் அது இந்த அமைப்பிற்குள் வரும்
4. எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும்
5. பலவீனமாக உள்ள லக்கின அதிபதியை அல்லது சூரியனை தீய கிரகங்கள் பார்த்தால் அது இந்த அமைப்பிற்குள்
6. லக்கினத்தில், சூரியன், செவ்வாய், சனி, ராகு ஆகிய நால்வரில் ஒருவர் இருந்தாலும் அது இந்த அமைப்பிற்குள் வரும
7. செவ்வாயும், சனியும் இரண்டாம் வீட்டில் இருக்க,ராகு மூன்றாம் வீட்டில் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
8. நான்காம் வீட்டில் ராகு, 6 அல்லது 8ஆம் வீட்டில் சந்திரன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
9. 7ல் செவ்வாய், 8ல் சுக்கிரன், 9ல் சூரியன் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
10. 7 & 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
11. லக்கினாதிபதி தீய கிரகத்துடன் கூட்டாக இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7ஆம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தாலோ அது இந்த அமைப்பிற்குள் வரும்
12. எட்டில் சனி, லக்கினத்தில் சந்திரன் அல்லது சுக்கிரன் (அல்லது சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து 6 அல்லது 8ல் இருக்கும் நிலைப்பாடு) அது இந்த அமைப்பிற்குள் வரும்
13. சந்திரனும், புதனும் 6 அல்லது 8ல் இருப்பது இந்த அமைப்பிற்குள் வரும்
|
அஷ்டலட்சுமி யோகம் |
ஆறாமிடத்து ராகு அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கும் என்று சொல்வர். அது மட்டுமல்ல, குருவும் கேந்திரங்களில் குறிப்பாக ராசியைப் பார்க்கும் விதத்தில் இருந்தால் தான் அந்த அஷ்டலட்சுமி யோகம் முறையாக செயல்படும்.
|
அஷ்டலெட்சுமி யோகம்! அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்
Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.
எட்டு மடங்கு யோகம் என்பார்கள்
Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga ) If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity !
இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம்:
சஷ்ட ஸ்தான கதே ராகு லக்ன கேந்த்ர கதே குரு அஷ்டலக்ஷ்மி சமயுக்தம் மத்யவான் கீர்த்திமான் நர!
The sloka for Ashtalakshmi Yoga is this Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th ) Lagna Kendra Gathe Guru ( Jup angular ) Ashtalakshmee Samayuktham Madhyavan Keerthiman Nara.
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:
தனலெட்சுமி - செல்வத்திற்கு (Dhana Lakshmi - Wealth as prosperity)
தான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு! (Dhanya Lakshmi - Agriculture as prosperity
தைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு Dhairya Lakshmi - Courage)
விஜயலெட்சுமி - வெற்றிக்கு (Vijaya Laksmi - Victory)
ஆதி லெட்சுமி - சக்திக்கு (Adi Laksmi - Power)
வித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு (Vidya Laksmi - Learning)
கஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு (Gaja Lakshmi Will Power)
சந்தானலெட்சுமி - குழந்தைச் செல்வத்திற்கு (Santhana Lakshmi Children as prosperity) The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and Jupiter should be powerful, however, to confer the full benefits of this yoga.
|
ஆதி யோகம் |
புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால், அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!
பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!
Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
|
ஆர செளரி யோகம் |
ஆர செளரி யோகம்! யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல். செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்! பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும். Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
சரி எப்படி எடுத்துக்கொள்வது? எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா? அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும் அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்
எல்லோருக்குமா? இல்லை! வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.
மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம். பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும்.
This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them. மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த யோகம் எப்போது உண்டாகும்? குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in Kendras (1st, 4th, 7th, or 10th) from each other. இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா? இல்லை! அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும்.
அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது
This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter. The yoga would also be best shown in life if both these planets are in their exaltation sign and are at an angle not just from each other but from Lagna as well. Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu and Saturn should not be associated with Moon. This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life.
அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்? அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி! எப்போது பலன் கிடைக்கும்? குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.
|
கிரகமாலிகா யோகம் |
கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம். நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். இருந்தால் அது மாலையோகம் எனப்படும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
A planetary combination under which all planets occupy consecutive houses leaving the intervening cardinal houses vacant. The individual under this combination is happy, handsome, and is provided with much ornaments, gems and jewels.
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்! Grahamalika "planetary garland" Yoga: All the nine planets consecutively in six or seven houses from the lagna. The native with a Grahamalika Yoga will be fortunate
உபரிச் செய்திகள்: Pancha-grahamalika Yoga: This is another type of Malika Yoga that considers Rahu and Ketu along with the visible planets. It is impossible for all the nine planets to be in less than 7 houses, therefore with respect to all the planets falling in 5 or 6 consecutive houses, consider the seven visible planets and only one of Rahu or Ketu. Just like the first group of Malika Yogas discussed, the Grahamalika Yogas are not dasa dependent, rather they indicate a foundation for success. The result of a Malika Yoga is dependent upon the house from which the yoga begins. The indications of that house will dictate the theme of the yoga. The Malika Yogas commencing from the dusthanas, therefore, have some undesirable effects, though all of them provide a foundation for success. If the Malika Yoga formed is also one of the troublesome house, though creating a foundation for success, the yoga will still indicate weaknesses in character that make it difficult for the native to really be happy and secure.
|
பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!
அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.
பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன். அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
|
கேமதுருமா யோகம்! இது ஒரு அவயோகம்! ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்! If moon is alone, doesnt have any planet before and after and also in front then it is Kemadruma. For Example moon in 2nd house. 1st , 3rd and 8th house is empty. Rahu and Ketu are not actual planet and they do not cancel the yoga if they are in the above mentioned houses
பலன் என்ன? சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும் இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம் பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.
Kemdruma gives trouble to mind. Since moon is mind and is alone it can be destructive. Many of the serial killers from the history have this yoga. It also makes the person very poor, mentally instable, gives inner fears, phobias, takes away happiness. It makes one do crimes
இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில் தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட நேரிடும் உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும
If there is a planet in house opposite (7th house from moon), it not only cancels Kemadruma, but gives kalpadruma yoga (similar to neecha bhanga raja yoga.) குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் இந்த
அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லலாம். மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்!
திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra) அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்!
ஓம் திரிபுரசுந்தரி போற்றி! ஓம் திரிபுரசுந்தரி போற்றி!
இதே மந்திரம் வடமொழியில்: க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"
Kleem Tripurasundarimoorthaye Namah Kleem Tripurasundarimoorthaye Namah
|
சக்கர யோகம் |
வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்! இன்னும் பல சக்கரங்கள் உள்ளன! காலச் சக்கரம் வாழ்க்கைச் சக்கரம் ராசிச் சக்கரம் நவாம்சச் சக்கரம் பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான். மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும். பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான். சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.
|
சகடயோகம் |
சகடயோகம்! சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர் சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் சகடயோகம் எப்போது ஏற்படும்? குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும் Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter.
என்ன பலன்? 1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான்.
Person with sakata yoga in his horoscope has to keep moving from one place to another for some work or the other.
|
எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்!
People like to be working at the same city or town where they reside. Sakata yoga does not allow this. பலன்
2 சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் one born in Sakata will have his fortune obstructed now and then. The native loses fortune and may regain it.
The periods of misfortune will accord with the times of transits in malefic Rasis - 6th, 8th and 12th. Every time the Moon transits the 6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realised.
சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில் இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும் சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும் கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே?
|
யோகங்கள்: ”சந்திரமங்கள யோகம்” ”சந்திரமங்கள யோகம்” ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது சந்திரமங்கள யோகம் எனப்படும். சிலர் அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான் If Mars conjoins the Moon, this yoga is formed Sasi Mangala Yoga - When mars and moon placed in same house. The natives finance never gets drain. He will get finance help when ever he needs.
யோகத்தின் பலன் என்ன? இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு. பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு. ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன். அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான் பக்க விளைவு. That is called as the side effects of this yoga Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing ones financial worth and at the same time the native will suffer with mental worries The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house.
இது உபரிச் செய்தி: சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய் இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில் சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல் ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில் உண்டு! The Moon in Taurus and Mars in Scorpio - The Moon in Cancer and Mars in Capricorn are excellent positions for the native of a horoscope!
சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அது சந்திரமங்கள யோகம் தான். சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட பாதிப்புக்களை உண்டாக்கும்:
1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும்.
2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும் Mars will create the tide within the mind, and influence the mental and emotional aptitude. Fighting mind and spirit, self protective, desire to rule and influence others, irritated and aggressive
3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய மனைவி, குடும்பம், மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும். சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம் இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம் இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன் அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள். ஆகவே ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள். அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால் உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects) Chandra Mangala Yoga gives wealth and also troubles to the native of the horoscope! எப்போது வழங்குவார்கள்? இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள்
அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்? இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்! The main difference lies in the house where chandra and mangala are placed. There are different infleunces on the houses: 1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம் 2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம் ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ, அந்த வீட்டை-அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின் அதிகாரம் உள்ள வீட்டை உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும். இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள் 6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து விடாதீர்கள்:-)))))) Therefore, each house will decide which planet among two, Moon or Mars dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga, and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the blessings of Benefic Moon If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious problems (apart from other good effects given by this Yoga)
வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.
2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.
3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!
4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது!
5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.
6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.
7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.
8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு!
9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!
10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.
11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!
12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை!
|
சரஸ்வதி யோகம் |
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga) Vairinchi means Saraswathi and this is a yoga for learning. யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும். இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
சஷ்ய யோகம்: சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. | | என்ன பலன்? ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன். அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன் கீழே உள்ளது </p> |
என்ன பலன்? ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன். அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன் கீழே உள்ளது
Shasya yoga: Saturn in its own sign or in exaltation, and in a kendra house - powerful, strict, position of authority.
|
யோகம் : சூரியனை தவிர்த்து மற்ற கிரஹங்கள் சந்திரனுக்கு இரண்டாமிடத்தில் இருந்தால். ஜாதகத்தில் சந்திரராசியி−ருந்து 2-வது இடம் செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன் அல்லது சனி தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால் சுனபயோகம் உண்டாகிறது. சுனபயோகத்தில் பிறந்த ஆடவர்கள் இயற்கையாக ஆஸ்திகள் மிக்கவராயும், புத்திக்கூர்மையும் புகழும் உடையவராயும் இருப்பார்கள். பார்வையிலும் சப்தத்தினாலும் உண்டாகும் சந்தோஷங்களை அனுபவிப்பார்கள். பொதுவாக தன்முயற்சியால் உயர்வார்கள். |
|
|
|
|
|
|
Keine Kommentare:
Kommentar veröffentlichen