வீரப்பா யின்னமொரு வினையைக்கேளு
விரையாதி குடும்பியுமோ ரேழில் நிற்க
சீரப்பா ஜென்மனும் வேடதாரி
சிவசிவா பாடகனாம் செய்யுளுள்ளோன்
கூரப்பா குமரியினால் லாபமுண்டு
கொற்றவனே செப்படி வித்தைகளும் செய்வன்
ஆரப்பா அரவத்தைப் பிடித்துவந்து
ஆட்டிவைப்பன் அனைவோரும் பார்க்கத்தனே
வீரமிக்க மறவனே! இன்னுமொரு சேதியினையும் நீ விநயமுடன் கேட்பாயாக! 12-க்குடையவனும் 2க்குடையவனும் 7ஆம் இடத்தில் நிற்க, இச்சென்மன் சீருடையவன் என்றும், பாடகன் என்றும், செய்யுள் இயற்ற வல்லவன் என்றும், பெண்களால் லாபமடைபவன் என்றும், அரசனைப்போல் அலங்காரப் பிரியனென்றும் செப்படி வித்தையில் தேர்ந்தவன் என்றும். எல்லாரும் காணும் படியாக அரவுதனை ஆட்டிவைத்துக் காணச் செய்பவன் என்பதையும் போகர் அருளாலே புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen