பகருவாய் ஆறோனும் லெக்கனாதி
பன்னிரெண்டெட்டாறில் தீயரோடே
இகருவாய் தேகமது ஜென்மனுக்கு
இளைத்து விடும்ரோகங்கள் கிட்டும்கிட்டும்
புகழுகின்ற அரவொடு ரெண்டோன் கூடி
பூங்குழலே ரெண்டதனி லமர்ந்து நிற்க
நிகழுகின்ற நீணிலத்தில் கல்வியாலே
நாலுவித பிரசங்க வித்வானாமே
இன்னுமொன்றுரைப்பேன் கேட்பாயாக ஆறுக்குடையனும் இலக்கினத்ததிபனும் 12,8,6 ஆகிய இல்லங்களில் தீயோரோடு இருக்கப் பிறந்த ஜென்மனுக்கு தேகத்தில் இளைப்பு உண்டாகும். அநேக வியாதிகள் வந்து வாய்க்கும். எல்லாரும் புகழும் அரவுடன் இரண்டுக்குடையவன் கூடி இரண்டாம் இடத்திலேயே நிற்க இந்நிலவுலகில் அச்சாதகன் தான் பெற்ற கல்வியின் நிமித்தமாக மிகச் சிறந்த வித்துவானாகவும் பிரசங்கியாகவும் மிளிர்வான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen