தானென்ற இரவிக்கு முன்னேபுந்தி
தனித்திருக்கப் புனிதனடா தரித்திரத்தோஷம்
தானென்ற யிரவிக்குப் பின்னேபுந்தி
தரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன்
தானென்ற யிரவிக்குப் பின்னேசேயும்
தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம்
தானென்ற குருவோடு நீலன்மேவ
தரணிதனில் செவிடனடா முடவன்பாரே.
தன்னிகரில்லாத ரவிக்கு புதன் முன்னே தனித்திருக்க அவன் புனிதனேயாவான். ஆனால் தரித்திர யோகம் கொண்டவனே. ஆனால் ரவிக்குப் பின்னால் புதன் நிற்பின் அச்சாதகன் பெயர் பூமியில் விளக்கமுறக் காணும். அவன் தனவானேயாவான். அதேபோல் ரவிக்குப் பின்னே செவ்வாய் நிற்க அச்சாதகனுக்குப் புத்திரர்கள் மெத்தவும் உண்டு. மற்றும், குருவோடு நீலனும் அவ்வாறு மேவ அச்சாதகன் செவிடனாகவும் முடவனாகவும் இருப்பான் என்று போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen