Montag, 27. August 2012

06 ஆறாம் வீடு 6 th house


பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
6ஆம் வீடு: Small Intestine ரோகஸ்தானம் ஆறாம் வீடு
, கடன். நோய். வழக்கு. ஜீரணம். ஊழியர். ஊழியம். வேலைக்காரர்கள். சிறுதொழில். சிறிய வருமானத்தை தரக்கூடிய தொழில்கள். வெற்றிக்குத் தடை. தாய் மாமன். கஞ்சத்தனம். பேராசை. திருட்டு. ஜெயில். மூத்த சகோதரத்தில் பிரச்சினை. வளர்ப்புப் பிராணிகள். வீட்டு மிருகங்கள்,
ஆறாம் வீட்டில் சென்று அமரும் கிரகங்களுக்கான பலன்கள்!
1 சூரியன். ஜாதகன் சிறந்த அரசியல்வாதியாக இருப்பான். வெற்றியாளனாக இருப்பான். எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பான். ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். சூரியனுடன் தீய கிரகங்கள் சேர்ந்து கூட்டாக இருந்தால் நீண்ட, தீர்க்க முடியாத வியாதிகள் உண்டாகும். சூரியனுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்திருந்தால் அல்லது பார்த்தால், ஜாதகன் நிர்வாகத் திறமை உள்ளவனாக இருப்பான். செல்வந்தனாக இருப்பான். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவனாக இருப்பான். இதே இடத்துச் சூரியன் சனியின் பார்வை பெற்றால், இதய நோய்கள் உடையவனாக இருப்பான். அல்லது பின்னாட்களில் இதய நோய்கள் உண்டாகும்!
2. சந்திரன் குழந்தைப் பருவத்தில் அடிக்கடி நோயுற்ற சேயாக இருந்திருப்பான். அதே இடத்தில் சந்திரன், செவ்வாய் அல்லது சனியின் சேர்க்கை/பார்வை பெற்றிருந்தால் தீராத நோய்கள் இருக்கும். மாறாத எதிரிகள் இருப்பார்கள். அதே இடத்துச் சந்திரன் நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால், ஜாதகன் திறமைசாலியாக இருப்பான். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கக் கூடியவனாக இருப்பான்.
3. செவ்வாய் மிகுந்த பந்த பாச உணர்வுகள் உள்ளவராக ஜாதகர் இருப்பார். வெற்றியாளர். அரசுக் கட்டிலில் அமர்ந்தால் சிறந்த நிர்வாகி அல்லது ஆட்சியாளராக இருப்பார். அதே செவ்வாய், சேர்க்கை அல்லது பார்வையால் தீய கிரகங்களின் கூட்டணியில் விழ நேர்ந்தால், விபத்துக்கள், விரையங்கள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் ஏற்படும். செவ்வாயுடன் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகன் அசாதரணமான மரணத்தைச் சந்திக்க நேரிடும்.
4. புதன் எதற்கெடுத்தாலும் தர்க்கம் செய்பவர். கல்வியில் தடைகள் ஏற்படும். புதன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பாதிக்கப் பட்டிருந்தால் மன நோய்கள், நரம்புத் தளர்ச்சி நோய்கள் உண்டாகும். சோம்பல் உண்டாகும். பேச்சில் கடுமை உண்டாகும். எதிரிகளுக்குப் பயப்பட மாட்டார். எதிரிகள் இவரைக் கண்டால் பயந்து ஓடுவார்கள்
5. குரு. சுறுசுறுப்பு இல்லாமை ஏற்படும். மெத்தனமாக இருப்பார். அவமானம், அவமரியாதை களைச் சந்திக்க நேரிடும். துரதிர்ஷ்டமானவர். அதே குருவிற்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் உடல் உபாதைகள் உண்டாகும்.
6. சுக்கிரன் விரோதிகளே இருக்கமாட்டார்கள். பெண்களால் ஏமாற்றப்படுவார்கள். பெண் ஜாதகராக இருந்தால் ஆண்களால் ஏமாற்றப்படுவார்கள். அதே சுக்கிரனுக்கு ஏற்படும் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால், ஜாதகர் அதீதமான பாலியல் உறவுகளில் ஈடுபாடு உடையவராக இருப்பார். அதனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு ஆளாகு பவராகவும் இருப்பார்.
7. சனி. வாதம் செய்பவர். பெருந்தீனிக்காரர். துணிச்சல்மிக்கவர். எதிரிகள் இல்லாதவர். அங்கிருக்கும் சனி, பார்வை அல்லது சேர்க்கையால் கெட்டிருந்தால், நோய்கள் உண்டாகும், நண்பர்களால் சீரழிவு உண்டாகும். சனியுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அல்லது சனி செவ்வாயின் பார்வை பெற்றால், அபாயகரமான நோய்கள் உண்டாகும். அடிக்கடி அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட நேரிடும். ராகு சேர்ந்தால் அல்லது பார்த்தால் (அதாவது ஆறில் இருக்கும் சனியை) ஜாதகருக்குக் ஹிஸ்டீரியா நோய் உண்டாகும். சனி நல்ல நிலமையில் அங்கிருந்தால் ஜாதகர் பெரிய காண்ட்ராக்டராகப் பணி செய்வார். பெரும் பொருள் ஈட்டுவார்.
8. ராகு. நீண்ட ஆயுள் உடையவர்.ஆரோக்கியமானவர். ஆனால் அவ்வப்போது எதிரிகளின் தொல்லைகளும் இருக்கும். ராகு கெட்டிருந்தால் புதிரான நோய்கள் உண்டாகும். இங்கே ராகு சந்திரனுடன் இருந்தால் அல்லது சந்திரனின் பார்வை பெற்றால் மனப் பிறழ்வு உண்டாகும்.(mental retartation) இதே இடத்தில் ராகுவுடன் சந்திரனும், சனியும் சேர்ந்திருந்தால், ஆசாமி ஊழல் பேர்வழியாக இருப்பார்.
9. கேது. கேதுவிற்கு மிகவும் உகந்த இடம் இதுதான். ஜாதகனுக்குப் புகழும், அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும் அல்லது தேடிவரும்! ஆனால் ஜாதகனின் நடத்தை சரியாக இருக்காது. சாமர்த்தியமாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார். புதன், சனி போன்ற நட்புக்கிரகங்களின் கூட்டணி அமைந்தால், ஜாதகன், மந்திர, தந்திர ஜால வேலைகளில் கெட்டிக்காரராக இருப்பார்.
பொதுவாக ஆறாம் வீட்டு அதிபதியால் பெரும்பாலும் தீமையான பலன்களே கிடைக்கும் அல்லது நடைபெறும். நம் ஜாதகத்தின் வில்லன் அவன்தான். அவன் தன்னுடைய தசா, புக்திகளில் அதை நடத்திக் காட்டித் தன் இருப்பை வெளிப் படுத்துவான். வேண்டா வெறுப்பாக அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆறாம் வீடு என்பது லக்கினத்திலிருந்து, லக்கினத்தை முதலாகக் கொண்டு எண்ணப்படும்போது ஆறாவதாக வருவது. ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய், கடன், எதிரி மற்றும் துரதிர்ஷ்டங்களைப் (Diseases, Debts, Enemies and Misfortunes) பற்றிச் சொல்லும் வீடு நோய்கள் இரண்டு வகைப்படும். தீர்க்கக்கூடிய நோய். தீர்க்க முடியாத நோய்! தீராத நோய்களைப் பிணி என்பார்கள். உதாரணம்; ஆஸ்த்மா! ஆனால் கடன் ஒரு வகைக்குள் அடங்கிவிடும். கடன் தீர்க்கக்கூடியதுதான். ஆசைகளையும், தேவைகளையும் அடக்கிக் கொண்டால், கடனே ஏற்படாமல்பார்த்துக்கொள்ளலாம். அல்லது ஏற்பட்ட கடனைத் தீர்த்துவிடலாம். கடன் இல்லாமல் இருப்பது சிரமம். ஆனால் கடன் இல்லாமல் இருந்து விட்டால் அது சுகம்! .

Keine Kommentare:

Kommentar veröffentlichen