4நான்கம் அதிபதி
நான்கம் வீடு தாய். சுகம். குழந்தைக்கு வைத்தியம். வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள். வீடு வாசல். மாடு. கன்றுகள். கல்லறைகள். சொந்த விவகாரம். இரகசிய வாழ்க்கை. கற்பு. தோட்டம். பொதுக் கட்டிடங்கள். ஞாபகச் சின்னங்கள். விவசாயம். ஆரம்பக் கல்வி. வியாபாரம். நீர் ஊற்றுக்கள். திருடி வைத்திருக்கும் பொருட்கள் (திருடப்பட்ட பொருட்கள் உள்ள இடம்). புதையல். ஆரம்ப நிலைக் கல்வி. முதலீடு,சுகம்,சொந்த இல்லம். சொத்து. நிலம். உடைமைகள். உடைகள். ஆடைகள். வாசனை திரவியங்கள். ஆபரணங்கள். தாயார். கல்வி. வாகனங்கள். சுரங்கங்கள். கிணறுகள். நதிகள். பாலங்கள். இவைகளோடு பொருத்தம் இருந்தால். விவசாய பொருட்கள். கால்நடை. செல்லப்பிராணிகள் முதலியவற்றைக் குறிக்கும்.
பொதுப் பலன்கள்.
1 நான்கில் குரு வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு சுபக் கிரகங்களுடன் கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும் மிகுந்திருப்பார்கள். ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
2 நான்கில் தீய கிரகங்கள் வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு தீய கிரகங்களுடன் கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல உறவுகளும், நண்பர்களும் இருக்கமாட்டார்கள். ஜாதகனின் வாழ்க்கை பிரச்சினைகள் உரியதாக இருக்கும்.
3 நான்காம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும், அல்லது 7லில் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும்.
4 நான்காம் அதிபதி 6ம் வீடு அல்லது 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடுகளில் சென்றமர்ந்தும், சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறாமலும் இருந்தால் ஜாதகனின் தாயார் அவனுடைய சிறுவயது அல்லது இளம் வயதிலேயே மரணமாகி விடுவாள்.
5 நான்காம் அதிபதி லக்கினத்திலும், நான்கில் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். அல்லது செல்வந்தனாக உயர்வடைவான்.
6 நான்காம் அதிபதி பகை வீடுகளில் சென்றமர்ந்தும், நான்காம் வீட்டில் சனி அல்லது செவ்வாய் வந்து அமர்ந்தும் இருந்தால், ஜாதகன் சொத்து செல்வம் எதுவும் இல்லாமல் இருப்பான். இருந்தால் அனைத்தும் அவனை வீட்டு நீங்கும் அல்லது தொலைந்து போகும்.
7 நான்காம் அதிபதி எட்டில் அமர்ந்தாலும் அல்லது நீசமடைந்திருந்தலும் அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது அஸ்தமணமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு வீடு வாசல் சொத்து சுகம் இருக்காது. இருந்தாலும் விரைவில் அவனை விட்டு அவைகள் நீங்கிவிடும் அல்லது தொலைந்து விடும் அல்லது கரைந்து விடும். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
8 நான்காம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால் ஜாதகனுக்கு நிறைய இடங்களையும், நிலங்களையும் வாங்கிச் சேர்க்கும் யோகம் உண்டு!
9 அப்படிப் பரிவத்தனை பெறும் கிரகங்கள் வலுவாகவும் அல்லது சுய வர்க்கத்தில் அதிக பரல்களுடனும் இருந்தால் ஜாதகன் அரசனுக்கு நிகரான சொத்துக்களுடன் இருப்பான். சிலர் ஆட்சிபீடத்திலும் அமர்வார்கள்.
10 நான்காம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியும் பர்வர்த்தனை ஆகியிருந்தால் ஜாதகன், சிக்கலிருக்கும் தன் முன்னோர் சொத்துக்களை மீட்கும் வேலையில் வெற்றி பெறுவான். அவைகள் உரிய காலத்தில் அவனிடம் வந்து சேரும்.
11 நான்கில் இருக்கும் குரு பலமில்லாமல் இருந்தால், ஜாதகனுக்கு சொத்து இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.
12 நான்காம் அதிபதி நீசம் பெற்று சூரியனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனின் சொத்துக்கள் அரச தண்டனையில் பறிபோகும். அல்லது நீதிமன்ற வழக்குகளில் பறி போகும்.
13 நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம் அதிபதியும் பகை வீட்டில் இருந்தால், ஜாதகன் தயக்கமில்லாமல் பல பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான்.
14 அதே நிலை ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால், ஜாதகி ஒழுக்கம் தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள்.
15 நான்கில் சந்திரன் இருக்க, அந்த வீட்டைத் தீய கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் தன் தாயைச் சின்ன வயதில் பறிகொடுக்க நேரிடும்.
16 நான்காம் வீட்டைக் குரு பார்த்தால், ஜாதகன் நேர்மையானவனாக இருப்பான்.
17 நான்காம் வீட்டை ராகு பார்த்தால் அல்லது நான்கில் இருந்தால் ஜாதகன் கல்மிஷம் பிடித்த மனதுக்காரனாக இருப்பான்.
18 நான்காம் வீடு இதயத்திற்கான் வீடு. இந்தவீட்டில் ராகு அமர்வது சுகக்கேடு. சிலருக்கு இதய நோய்ஏற்படும். The heart may be afflicted if rahu is posited in the fourth. (As the Fourth House rules the heart).
19 If rahu is in the 4th house, the native will be devoid of happiness, landed properties, relatives and conveyances and all relatives will become enemies. This position of the Rahu is detrimental in getting affection from mother.
20 நான்காம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தாலும் அல்லது லக்கினாதிபதிக்கு எட்டில் இருந்தாலும், ஜாதகனுக்குத் தன் தாயுடன் சுமூகமான, அன்பான உறவு இருக்காது.
21 நான்காம் வீட்டில் இருக்கும் சுக்கிரனும், பத்தாம் அதிபதியும் வலுவாக இருந்தால் ஜாதகன் இசையில் பெரிய ஆளாக வருவான்.
22 நான்காம் வீட்டில் இருக்கும் குருவும், பத்தாம் அதிபதியும் வலுவாக இருந்தால் ஜாதகன் சிறந்த கல்வியாளனாக விளங்குவான்.அத்துறையில் புகழ் பெறுவான்.
23 சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து நான்கில் இருந்தாலும் அல்லது நான்காம் வீட்டைப் பார்த்தாலும், ஜாதகன் கணிதப் பாடத்தில் உயர் கல்விவரை படிப்பான்.
24 நான்காம் அதிபதியும் புதனும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன் பெரிய சிந்தனையாளனாக வருவான்
25 நான்காம் அதிபதியும் சூரியன் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன் தலைவனாக வருவான் அல்லது தலைமைப் பதவிக்கு உயர்வான்.
26 நான்காம் அதிபதியும் செவ்வாயும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன் படைத்தளபதி உயர்வான்.
27 நான்காம் அதிபதியும் குருவும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன் நீதிபதியாக உயர்வான்
28 4th lord + சுக்கிரன் வலுவாக இருந்தால் ஜாதகன் = கவிஞன் தத்துவஞானி
29 4th lord + சனி வலுவாக இருந்தால் ஜாதகன் = statesman and leader
30 4th lord + ராகு வலுவாக இருந்தால் ஜாதகன் = diplomat
31 4th lord + கேது வலுவாக இருந்தால் ஜாதகன் = spiritualist, seer, prophet
32 நான்காம் அதிபதி, லக்கின அதிபதி, குரு, புதன் ஆகிய நான்கு அம்சங்களும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் கல்வியையை நிர்ணயம் செய்யும். இவற்றுள் லக்கின அதிபதி மிகவும் 'வீக'காக இருந்தால் மற்ற மூன்றும் பலனற்றதாகிவிடும்
நான்காம் வீடு முக்கியமான வீடுகளில் ஒன்று. நான்காம் வீட்டைவைத்துத்தான் ஜாதகனின் தாய், கல்வி, வாழ்க்கை வசதிகள் (Comforts in life) ஆகிய மூன்றையும் சொல்வார்கள் கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடுதான். ஒரு வேடிக்கை பாருங்கள். கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடு. அறிவிற்கு (keen intelligence) உரிய வீடு ஐந்தாம் வீடு. கல்வி, அறிவு இரண்டையும் ஒரே வீட்டில் இறைவன் வைக்கவில்லை. வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அந்த வீடு கெட்டுப்போயிருந்தால் மனிதனுக்கு கல்வி, அறிவு இரண்டும் இல்லாமல் போய்விடும். ஆகவே வைக்கவில்லை. அப்படி ஒரு சகாயம்! அதனால்தான் படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு ஜாதகத்தில் ஒன்று நன்றாக இல்லாவிட்டாலும் ஒன்று நன்றாக இருக்கும்! கல்வி அடிபட்டிருந்தாலும், அறிவு தூக்கலாக இருக்கும். இல்லை அறிவு அடிபட்டிருந்தால், கல்வியாவது நன்றாக இருக்கும். இரண்டு வீடுகளும் நன்றாக அல்லது சரியாக இருந்தால், படித்த அறிவாளியாக இருப்பான்.
நான்காம் வீட்டு அதிபதி (அவர்தான் முக்கியம். அவர்தான் அந்த வீட்டின் நாயகன்) நன்றாக இருந்தால், அந்த வீட்டின் அம்சங்கள் அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும். நன்றாக இருப்பது என்பது என்ன? சோப்புப் போட்டுக் குளித்து, படிய தலை வாரி, ஜோவன் மஸ்க் சென்ட் அடித்துக் கொண்டு, வான் ஹுஸைய்ன் ஆயத்த அடைகளை அனிந்து கொண்டு, அரவிந்தசாமி லுக்கில் இருப்பதா? இல்லை! நாயகன், கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் இருப்பதும், ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதும், அதோடு சுயவர்க்கத்தில் நல்ல பரல்களைப் பெற்று இருப்பதுமே ஆகும். அதோடு சுப கிரகங்களுடன் கூடி இருத்தல் கூடுதலான விஷேசம். அதைவிடச் சிறப்பு பத்தாம் வீட்டில் அமர்ந்து தனது வீட்டை நேரடியான பார்வையில் வைத்திருத்தல்.
கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான்.
நான்காம் வீட்டு அதிபன் ஜாதகத்தில் சென்று அமர்ந்த இடத்தை வைத்துப் பொதுப் பலன்கள். 1ல் அதாவது லக்கினத்தில் இருந்தால் ஜாதகன் வீடு, வாகனம், நிலபுலன்கள், மாடு கன்றுகள் உடையவனாக இருப்பான். மாடு கன்றுகள் வேண்டாமா? அந்தக் காலத்தில் இருந்தவன் அப்படித்தான் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான். நீங்கள் அவற்றை மைனஸ் செய்து கொள்ளுங்கள். கிராமத்தில் இருப்பவன் டிராக்டர்கள் வைத்திருப்பான். நகரத்து ஆசாமி குவாலிஸ் வண்டி வைத்திருப்பான். வேளா வேளைக்கு விதம் விதமாய் சாப்பாடு கிடைக்கும் அல்லது ஜாதகன் வேளாவேளைக்கு 'மேரி பிரவுன்' அல்லது 'சரவண பவன்' டேஸ்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். மனையாள் சுகம் மிக்கவனாக இருப்பான். மனையாள் சுகம் என்ன வென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்:-)))) பலராலும் போற்றப்படுபவனாகவும், விரும்பப்படுபவனாகவும் இருப்பான். தாய்வழிச் சொந்தங்கள் அவனைக் கொண்டாடி மகிழ்வார்கள். கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான். நான்காம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், ஜாதகன் அந்தஸ்து, பெரிய பதவிகள் என்று சிறப்பாக வாழ்வான். நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான். அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் If the 4th lord is in the ascendant, the native will have all sorts of domestic comforts, houses & conveyances. They are outspoken, independent, clever and intelligent. Their mother will be affectionate! They will be appreciated in the field of education. They will have the help of many friends and uncles.
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால் தாயாருக்குப் பிடித்த மகனாக இருப்பான். தாயாரின் அன்பும் ஆதரவும் ஜாதகனுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் அதைவிட முக்கியமமாக தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் நாம் சம்பாதிக்காமல் வரும் சொத்துக்கள் முக்கியம்தானே? குடும்ப வாழ்க்கை, ஏஆர் ரஹ்மான் இசை பின்னணியில் ஒலிக்க, மிகவும் ரம்மியமாக இருக்கும். If the 4th lord is in the 2nd the native will inherit much from their mother or maternal relatives நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலே சொன்ன பலன்கள் இருக்காது. அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
3ல் இருந்தால் ஜாதகனின் உடன்பிறப்புக்கள் பெயர் சொல்லும்படியாக இருப்பார்கள். அதாவது நல்ல நிலைமையில் (position) இருப்பார்கள். ஜாதகனைவிட அவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஜாதகனின் தாயார் நோயால் அவதியுற நேரிடும் கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும். வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகி அதனால் வாழ்க்கை சுகப்படாமல் இருக்கும் நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகிவிடும் தாய்வழி உறவுகள் பகையாக மாறிவிடும். வாழ்க்கை வசதிகள் நீங்கிவிடும் அல்லது இல்லாமல் போய்விடும். இது நான்காம் வீட்டிற்கு, அதிலிருந்து பன்னிரெண்டாம் வீடு. அதை மனதில் கொள்க!
4ல் இருந்தால் நான்காம் வீட்டு அதிபதி நான்கிலேயே இருந்தால், ஜாதகன், வீடு, வாகனம் என்று வசதியுடன் வாழ்வான். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு கிடைக்கும் மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை பெற்றிருப்பர்கள். கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள். ஆன்மிகத்திலும், தத்துவ விசாரங்களிலும் ஈடுபாடுகொண்டிருப்பார்கள். அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள் பலரும் ஜாதகனிடம் விசுவாசமாக இருப்பார்கள். பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை ஜாதகனுக்கு அமையும். பெண்சுகம் திளைக்கும்படியாகக் கிடைக்கும். அத்துடன் பெண் வழிச் சொத்துக்களும் கிடைக்கும் (ஆகா, இதல்லவா டபுள் அதிர்ஷ்டம்:-)))
5ல் இருந்தால் நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியும், மதிப்பும் உண்டாகும். ஐந்திற்கும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாதகன், வரவு மிகுந்தவனாக இருப்பான். வீடு, வண்டி வாகனம் என்று வசதிகள் மிகுந்தவனாக இருப்பான். தனது வீட்டிலும், சுற்றியுள்ள சமூகத்திலும் செல்வாக்கு உடையவனாக இருப்பான். சிலர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் ஈட்டுவார்கள் நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான். அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
6ல் இருந்தால் நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும். நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும் They may not get much happiness from mother & conveyances They are basically careless and indifferent. Their mother's health may be affected. They are short tempered. Some of their friends may turn enemies. Uncles and aunts also turn enemies.
7ல் இருந்தால் ஜாதகன் கல்வித்துறையில் இருந்தால், தன் துறையில் புகழ் பெறுவான். சிறந்த கல்விமானாக இருப்பான். அதிகம் படித்தவனாக இருப்பான். நான்காம் வீடு கல்விக்கும் உரிய வீடு, அதன் அதிபதி ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதால் இந்தப் பலன்கள். அதை மனதில் வையுங்கள். ஜாதகனுக்கு நல்ல தாய் கிடைப்பாள். வாழ்க்கை சொத்துக்கள், சுகங்கள் மிகுந்திருக்கும். சிலர் நிறைய வீட்டு மனைகளை வளைத்துப் போடுவார்கள். நிறைய வீடுகளைக் கட்டுவார்கள். எல்லோரிடமும் இன்முகத்துடன் பழகுவார்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். மொத்தத்தில் உதாரண மனிதர்களாகத் திகழ்வார்கள். இந்த இடம், திருமணத்திற்கு உரிய இடம் (7th House, house of marriage) வந்திருக்கும் கிரகம் தாய் வீட்டைச் சேர்ந்தது. ஆகவே இந்த அமைப்புள்ளவர் களுக்கு தாய்வழி உறவில் இருந்து மனைவி கிடைப்பாள். சிலர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள். அதுபோல சிலர் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக் கொண்டிருப்பார்கள். அதாவது வீடு வாகனங்களை அடிக்கடி மாற்றுவார்கள். நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலே சொன்ன பலன்கள் இருக்காது. அதற்காக வருத்தப் பட வேண்டாம். அதற்கு நஷ்ட ஈடு ஜாதகத்தில் வேறு வழியில் கொடுக்கப்பட்டிருக்கும்!
8ல் இருந்தால். எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமல்ல, வாழ்க்கையில் சந்திக்கப்போகும் சிரமங்கள் மற்றும் அவஸ்தைகளுக்கான வீடும் அதுதான். It is also house of difficulties. சிறு வயதில் ஜாதகன் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான். அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருந்திருக்காது. தாயன்பு கிடைத்திருக்காது. தாயார், வறுமையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவளாக இருப்பாள். சில தாய்களுக்கு அந்த வறுமையான சூழல் தொடரும். அதனால அவள் ஆசைப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு அவளால் உரிய கல்வியைத் தரமுடியாது. ஜாதகன் வறுமைக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வளர்ந்திருப்பான். வீடு, வாகனங்கள், சொத்துக்கள் என்று எதுவும் சொல்லும்படியாகக் கிடைக்காது. உறவுகளும் நண்பர்களும் பொய்யாகிப் போகும் அல்லது போவார்கள். இந்த நிலைமை கொடுமையானது. அதாவது இந்தப் பொய்யாகிப் போகும் நிலைமை! என்ன செய்வது? விதி என்று நொந்து கொள்ளலாம் அவ்வளவுதான். நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்
9ல் இருந்தால் ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான அமைப்பு இது. ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா? சரி, ரெம்பவும் நெகிழ்ந்து, கதை விடாமல் பலனைச் சொல்லுங்கள். இதோ பலன்கள்: The native will be blessed by a loving and compassionate mother அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார். ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான். நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள், செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிப்பவனாகவும், தெய்வபக்தி மிகுந்தவனாகவும் இருப்பான். ஜாதகனுக்கு ஆழ்ந்த ஆறிவு, நல்ல சிந்தனைகள், நகைச்சுவை உணர்வு மிகுந்து இருக்கும் நல்ல தந்தைக்கும், தந்தை வழிச் சொத்துக்களுக்கும் இது ஒரு உன்னத அமைப்பாகும். நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது. அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
10ல் இருந்தால் ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது. நன்மைதரும் அமைப்பு! ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலையில் அபரிதமான முன்னேற்றம் கிடைக்கும். தன்னுடைய வேலையில் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவனாக இருப்பான். சிலருக்கு அரசியல் தொடர்பு கிடைக்கும். அதில் வெற்றியும் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டுவார்கள் ஜாதகன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பான். எந்த இடத்திலும் அவனுடைய வரவை அல்லது இருப்பைப் பலரும் உணரும்படி செய்யக்கூடியவன். வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக இருப்பான். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பான். அவர்களும் அவனுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள் நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால், மேலே சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான். அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
11ல் இருந்தால் இந்த அமைப்பால் ஜாதகன் செளகரியங்கள், சுகங்கள் நிறைந்தவனாக இருப்பான். தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருளை லாபமாகப் பெறுவான். சிலர் சிறு வயதிலேயே தங்கள் தாயாரை இழக்க நேரிடும். இந்த வீடு நான்காம் வீட்டிற்கு அதிலிருந்து எட்டாம் வீடு. அதை மனதில் கொள்க! If the 4th lord is in the 11th the native will be wealthy. The native will have a lot of good friends. They will have lots of gains as 11th house rules gains and the fulfillment of all desires. A good house and conveyances are guaranteed. He will have lot of mental tensions also as 11th is 8th to the fourth. Lack of mental peace and bliss can result.
12ல் இருந்தால் நன்மை எதுவும் இல்லாத அமைப்பு. சுகங்கள், செளகரியங்கள் குறைந்து இருக்கும். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு இருக்காது. வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும், நஷ்டங்களும், வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அனைத்தும் விரையமாகிக் காணாமல் போய்விடும். மொத்தத்தில் சிரமமோ சிரமம். The native will have to face many ills & unhappy situations in life. The lord of 4th house in this house of loss shows loss of comforts. Regarding house they may have to face many problems. They may have to encounter litigation and problems regarding house. They may not be happy with regard to mother. Uncles and aunts will become enemies Some friends also go against them. They will be beset by many problems and difficulties. Expenditure rises and they may have to spend much money on house and conveyances. They may have to face losses in speculation. சுபக் கிரகங்களின் பார்வை இந்த அமைப்பின் மேல் பட்டால் அவை குறையும் அல்லது நீங்கும். இல்லாவிட்டால் நோ சான்ஸ்!
நான்கம் வீடு தாய். சுகம். குழந்தைக்கு வைத்தியம். வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள். வீடு வாசல். மாடு. கன்றுகள். கல்லறைகள். சொந்த விவகாரம். இரகசிய வாழ்க்கை. கற்பு. தோட்டம். பொதுக் கட்டிடங்கள். ஞாபகச் சின்னங்கள். விவசாயம். ஆரம்பக் கல்வி. வியாபாரம். நீர் ஊற்றுக்கள். திருடி வைத்திருக்கும் பொருட்கள் (திருடப்பட்ட பொருட்கள் உள்ள இடம்). புதையல். ஆரம்ப நிலைக் கல்வி. முதலீடு,சுகம்,சொந்த இல்லம். சொத்து. நிலம். உடைமைகள். உடைகள். ஆடைகள். வாசனை திரவியங்கள். ஆபரணங்கள். தாயார். கல்வி. வாகனங்கள். சுரங்கங்கள். கிணறுகள். நதிகள். பாலங்கள். இவைகளோடு பொருத்தம் இருந்தால். விவசாய பொருட்கள். கால்நடை. செல்லப்பிராணிகள் முதலியவற்றைக் குறிக்கும்.
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
4ஆம் வீடு: நுரையீரல், இதயம் (Lungs and Heart)
1. சூரியன் நன்மையல்ல! ஜாதகன் மனக்கவலைகள் மிகுந்தவன். மகிழ்ச்சி இராது. ஒரு இடத்தில் இருக்க மாட்டான். சிலர் தத்துவங்கள், சாஸ்திரங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்திருப்பார்கள். இந்த அமைப்புள்ளவன் அரசியலில் ஈடுபட்டல் வெற்றி பெற முடியாது. இங்கே இருக்கும் சூரியன், சனி அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால் ஜாதகன் பல இடையூறுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். Sun: mental anxiety, enmity with relatives and bad effects to mother
2. சந்திரன். ஜாதகனுக்கு சொந்த வீடு இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இருக்கும். ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன்னிறைவுடன் இருப்பான். சிலர் ஆட்சி பீடத்தில் அமர்வார்கள். இங்கே இருக்கும் சந்திரனைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் சிறு வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். அல்லது இழக்க நேரிடும். இங்கே இருக்கும் சந்திரனைச் சுக்கிரன் பார்த்தால், ஜாதகன் தன்னுடைய மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்வான். எதையும் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. புரிந்து கொள்ளுங்கள். இங்கே இருக்கும் சந்திரனைக் குரு பார்த்தால், ஜாதகன் மிகவும் நேர்மையானவன். தன்னுடைய செயல்களால் பலரது பாராட்டையும் பெறுவான்.
3. செவ்வாய் இது மோசமான நிலை. விரும்பத்தக்கது அல்ல! ஜாதகனுக்கு அவனது அன்னை, உற்வினர்கள், மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி இராது. அரசியலுக்குச் சென்றால் வெற்றி பெறுவான். தாயாருடனும் மற்றும் குடும்ப உறவினர்களுடனும் அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட நேரிடும். ஜாதகனுக்கு வீடு வாசல் இருக்கும். ஆனால் அவற்றால் மகிழ்ச்சி இருக்காது. செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்து இந்த இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் இருப்பார்கள். Mars - bad for mother but acquisition of property and vehicles will be there.
4. புதன் ஜாதகன் சிறந்த கல்வியாளனாக இருப்பான். சிலருக்குக் கெளரவப் பதவிகள் வந்து சேரும். பலராலும் போற்றப்படுவான். பாராட்டப்படுவான். நல்ல சொத்துக்கள் வாகன வசதிகளை உடையவனாக இருப்பான். அல்லது அவைகள் வந்து சேரும். சிலர் இசையில் ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் இசையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளிலும் ஆர்வம் இருக்கும் அதன் காரணமாக பல நாடுகளுக்கும் அல்லது பல இடங்களுக்கும் சென்றுவரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்களாக இருப்பார்கள். வாழ்த்தெரிந்தவர்கள் Mercury - Intelligent, clever in speech, good education and acquisition of property.
5. குரு அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள் எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட மாட்டார்கள். இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள் Jupiter - Good for mother, Good education, good home and good vehicles.
6. சுக்கிரன் யோகமான அமைப்பு. தாயின் மேல் மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள். சொத்து, சுகங்கள் இருக்கும் அல்லது வந்து சேரும். நல்ல குணமுடையவர்கள் ஏராளமான நண்பர்களை உடையவர்கள். சிலர் இசையில் நாட்டமுடையவர் களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள். இவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Venus - Good for mother, Wealth, property, acquisition of jewels, vehicles etc. If in his own house or the house of exaltation he causes Maalavya yoga which is one of the Pancha Maha purusha yogas in astrology.
7. சனி இளம் வயதில் நோஞ்சானக அல்லது நோயுற்றவனாக இருப்பார்கள். இளம் வயதில், தாய் மற்றும் தாயன்பு இல்லாமல் போயிருக்கும். கடுகடுப்பான மன நிலை இருக்கும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அது கையில் கிடைப்பதற்கு பல அவஸ்தைகளைச் சந்திக்க நேரிடும். சிலர் சுற்றத்தாரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வாழ்க்கை தனிமைப் பட்டுப் போகும். மகிழ்ச்சி இருக்காது. சுபக்கிரகங்களின் பார்வை இல்லையென்றால் மேற்கூறியவைகள் அனைத்தும் நடக்கும் Saturn: Saturn in 4th other than his good houses is not good. Will be interrupted or prolonged beyond reasonable age of completion. Bad for mother also.
8. ராகு மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை. சிலரின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கும். மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். சிலர் மோசடிகளைச் செய்து விட்டு அதனால் மன நிம்மதியில்லாமல் இருப்பார்கள் Rahu - bad on the whole except when Rahu is exalted
9. கேது தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை. சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும். வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும், பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும். பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல! Ketu: good for education but Mother will suffer great anxiety on account of one child
நான்காம் வீடு பொது வாழ்க்கையைக் குறிக்கக்கூடியது. அதில் வலிமையான கிரகம் இருந்தாலோ அல்லது பார்வையிட்டாலோ, ஜாதகன், அரசியலில் பெரும் வெற்றியைப் பெறுவான். பொதுவாக ஒருவரது உணவுப் பழக்கம், நடத்தை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பது 4ஆம் இடமாகும் |
Keine Kommentare:
Kommentar veröffentlichen