Sonntag, 26. August 2012

பதினோன்றாம் வீடு

பதினோன்றாம் வீடு மூத்த சகோதரம். லாபம். எதிர்பார்த்தது நண்மையில் முடிதல். நண்பர்கள். ஆசைகள் முழுமையாக எதிர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசகம். உதவி கிடைக்குமிடம். எல்லாவற்றிற்கும் வெற்றி. மருமகன். மருமகள். நீர்ப் பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள். அரசு வகை கூட்டுக் குழுக்கள் (சட்ட சபை. ஊராட்சி. நகராட்சி. ,,,) நிரந்தர நட்பு. திட்டங்கள்,


பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:



11ஆம் வீடு: கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை



1. செல்வத்தை (பணத்தை) விரும்பாத மனிதனே கிடையாது. செல்வத்தைத் தருவது பத்தாம்வீடும், பதினொன்றாம் வீடும், அவை இரண்டைவிட முக்கியமாக இரண்டாம் வீடுமே ஆகும். அப்படி அந்த வீட்டு நாயகர்கள் நமக்கு அள்ளித்தரும் பணத்தை நம் கைகளில் இருந்து கரைப்பவர்கள், 6, 8, மற்றும் 12ஆம் வீட்டு நாயகர்களே. முதலில் கூறிய மூவரும் (அதாவது 10th, 11th & 2nd Lords) நம்முடைய ஹீரோக்கள் பின்னால் கூறிய மூவரும் (6, 8, மற்றும் 12ஆம் அதிபதிகள்) நம்முடைய வில்லன்கள்



2. ஹீரோக்களின் வீடுகளைப் பாருங்கள். அங்கே அஷ்டகவர்கத்தில் 30ம், அதற்கு மேலும் பரல்கள் இருந்தால் நல்லது. கவலையே படவேண்டாம். வில்லன்கள் எவ்வளவு வேகமாகக் கரைத்தாலும், அதற்கு மேலேயே உங்களுக்குப் பணம் வரும்



3. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகமாக இருந்தால், எவ்வளவு பணம் வந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாத்தித்தாலும், அல்லது உங்கள் தந்தைவழிச் சொத்து எவ்வளவு இருந்தாலும், அவ்வளவும் கரைந்து விடும் கையில் ஒன்றும் தங்காது. பூட்டுப்போட்டுப் பூட்டிவைத்தாலும் தங்காது!



4. அப்படிக் கரையும் பணம்கூட, வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும் அந்த வீடுகளைச் சுபக்கிரகங்கள் பார்க்கும் என்றால், நல்ல வழியில் கரையும். உங்கள் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளும் வழியில் கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்கும் வழியில் கரையும்.



5. இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்,அந்த வீடுகள் பாவக்கிரகங்கள் அல்லது தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் உங்கள் பணம் தீய வழியில் கரையும். சீட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், குடி, பெண்பித்து, என்று தீய வழியிலேயே கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்காத வழியில் கரையும், நீங்கள் மற்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாத வழியில், ஏன் வெளியில் சொல்ல முடியாத வழியில் கரையும்



6. அதுபோல 12ஆம் வீட்டை நல்ல கிரகங்கள் பார்த்தால், உங்கள் தந்தை அல்லது மனைவி, அல்லது நண்பர்கள் உங்கள் மீது கவனம் செலுத்தி, உங்கள் பணம் கரையாமல் காப்பார்கள்.



7. அதற்கு மாறாக 12ஆம் வீடு தீயகிரகங்களின் பார்வையில் இருந்தால், உங்களுக்குப் புத்தி சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஓட்டைப் பானையில் ஊற்றும் தண்ணீர் போல உங்கள் பணம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.



8. 12ஆம் வீட்டுக்காரனும், ஒன்பதாம் வீட்டுக்காரனும் பரிவர்த்தனையாகியிருந்தால் ஜாதகன் தன் பணத்தை அறவழியில் செலவு செய்வான். நிறைய தர்ம கரியங்களைச் செய்வான்.



9. 12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும் ஜாதகன் பெருந்தன்மையானவனாக இருப்பான்.



10. அதே அமைப்பில் (12ஆம் வீட்டு அதிபதி உச்சம் பெற்றிருத்தல் அல்லது நட்பு வீட்டில் இருத்தல்) நல்ல வர்க்கத்துடன் கூடிய ஒன்பதாம் அதிபதியின் பார்வை பெற்றால் ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான்.




Keine Kommentare:

Kommentar veröffentlichen