Samstag, 25. August 2012

08 எட்டாம் வீடு


எட்டாம் வீடு ஆயுள். அவமானம். கண்டம். மரணம். இயற்கையான மரணம். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல். வரதட்சணை. சீர். மாங்கல்யம். ஆப்ரேஷன். கசாப்பு கடைகள். மலக் கழிவிடம். கர்பப் பை,
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
8.வெளி பிறப்பு உறுப்புக்கள்(ஆண்குறி, பெண்குறி), குதம் External Sexual Organs, Large Intestine, Anus
ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்
ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக திசை  அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .
1 எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார்.
2. மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே!
3. அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.
1 எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்: கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், வியாதிகள், கடன் தொல்லை, வறுமை எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், வறுமையில் உழல நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிக்ககூடும். விபத்துக்கள் நேரிடும்
2 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்: கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
3 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்: உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும்.காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு  இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
4. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்: தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள்  சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்  வெகுவாகக் குறைந்துவிடும்
5 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்: பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும். அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த  இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்

6. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்: அற்ப ஆயுள் (** இது பொது விதி) உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும்.
7 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்: பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.

8. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:
மேஷ லக்கினத்திற்கு எட்டாம் வீடு விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும்.ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

ரிஷப லக்கினத்திற்கு எட்டாம் வீடு தனுசு. அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு மகரம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
கடக லக்கினத்திற்கு எட்டாம் வீடு கும்பம். அதன் அதிபதி சனிக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
சிம்ம லக்கினத்திற்கு எட்டாம் வீடு மீனம். அதன் அதிபதி குருவிற்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
கன்னி லக்கினத்திற்கு எட்டாம் வீடு மேஷம். அதன் அதிபதி செவ்வாய்க்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
துலா மிதுன லக்கினத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
விருச்சிக லக்கினத்திற்கு எட்டாம் வீடு மிதுனம். அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
தனுசு லக்கினத்திற்கு எட்டாம் வீடு கடகம். அதன் அதிபதி சந்திரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
மகர லக்கினத்திற்கு எட்டாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
கும்ப லக்கினத்திற்கு எட்டாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதனுக்கு இங்கே ஒரே நிலை உச்ச பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.
மீன லக்கினத்திற்கு எட்டாம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரனுக்கு இங்கே ஒரே நிலை ஆட்சி பலம் இருக்கும். ஆனால் சேர்க்கை அல்லது பார்வையால் அவர் வலு இழக்கலாம்.

எட்டாம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருந்தால், ஜாதகன் தான் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலேயே செய்வான். அதனால், பல நஷ்டங்களை, தீமைகளை அவன் சந்திக்க நேரிடும்.

எட்டாம் அதிபதி  சேர்க்கை அல்லது பார்வையால் கெட்டிருந்தால் மேற்சொன்னவற்றிற்கு எதிர்மாறான பலன்கள் கிடைக்கும் சிலரது தந்தை சிக்கலான சூழ்நிலையில் இறந்துவிடுவார்.

எட்டாம் அதிபதி கெட்டிருந்தால், ஜாதகன் எடுத்துச் செய்யும் முக்கிய செயல்கள் எல்லாம் தோல்வியில் முடியும். தவறான, ஒவ்வாத தொழில்களையே அவன் செய்வதற்குத் தூண்டப்படுவான். அதன்மூலம் கைப்பொருள் அனைத்தையும் இழப்பான்.

எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள்இருக்காது. நல்ல பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்

9 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்: பூர்வீக சொத்துக்கள் கிடைக்காது. கிடைத்தாலும் நாசமாகிவிடும் பிள்ளைகளால் கடன் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதன் மூலம் மோதல்கள், பிரிவுகள் உண்டாகும். என்னடா வாழ்க்கை என்னும் நிலை ஏற்படும். ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பெற்றிருந்தால் ஜாதகனின் தந்தை ஒன்பதாம் அதிபதியின் தசா/புத்தியில் காலமாவார். இங்கே உள்ள எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால், ஜாதகனுக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாத தன்மை நிலவும். இங்கே உள்ள எட்டாம் அதிபதி ஆட்சி அல்லது பார்வை/சேர்க்கை பலத்துடன் இருந்தால், ஜாதகனுக்குப் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தைவழி உற்வுகளிடையே அவனுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். இல்லை என்றால் இதற்கு நேர் மாறான பலன்களே கிடைக்கும்!
10 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பத்தில் இருந்தால்: ஜாதகன் ஒரே வேலையில் நிலைத்து இருக்கமாட்டான். அடிக்கடி தன் வேலையை அல்லது தொழிலை மாற்றிக்கொள்வான். சிலர் உறவினர்களிடமும், சக மனிதர்களிடமும், அரசாங்கத்துடனும் கெட்ட பெயரை உண்டாக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். எட்டாம் அதிபதி லக்கினத்திற்குப் பத்தில், அந்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து இருந்தால், அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் வேண்டிய அளவு முன்னேற்றம் இருக்காது. தடைகளும், தாமதங்களும் மிகுந்திருக்கும். அதுவும் இந்த அமைப்பு, தீய கிரகத்தின் பார்வை பெற்றிருந்தால், அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களிலும் உரிய மரியாதை இருக்காது. அதனால் சிலர் அதர்மவழியில் பொருள் ஈட்ட நேரிடும். அவர்களுடைய எண்ணங்களும் தவறானதாக இருக்கும். செயல்களும் சட்ட திட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும். சிலர் வருமானம் குறைந்து வறுமையில் உழல நேரிடும். இரண்டாம் வீட்டுக்காரன் பலமின்றி இருப்பதோடு, எட்டாம் வீட்டுக்காரனுடன் கைகோர்த்துப் பத்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவன் தலைமுடிக்கு மேல் கடன்கள் ஏற்படுவதோடு, கடனைத் திருப்பிக்கொடுக்கமுடியாமல் அவதிப்ப்ட நேரிடும். அவமானப்பட நேரிடும். எட்டாம் வீட்டுக்காரன் பத்தில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், வாழ்க்கை சுகமாக இருக்கும். ஜீவனுமும் ஏற்றமுடையதாக இருக்கும். தீர்க்கமான ஆயுள் இருக்கும். அத்துடன் ஜாதகனுக்கு, திடீர் பொருள் வரவுகள் உண்டாகும். சிலருக்கு அவனுடைய உறவுகள் மரணமடைந்து, அவர்களுடைய செல்வங்கள், சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
11. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் இருந்தால்: மூத்த சகோதரர்கள், சகோதரிகளை இழக்க நேரிடும். நேர்மையான வழியில் இல்லாது, பலவழிகளிலும் ஜாதகன் பொருள் ஈட்டுவான். எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பதினொன்றில் பதினொன்றாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், செய்யும் தொழில்கள் நஷ்டமடையும். பொருளை இழக்க நேரிடும். கடைசியில் கடனாளியாக நேரிடும் இங்கே வந்தமரும் எட்டாம் வீட்டுக்காரன், சுபக்கிரகத்தின் பார்வையைப் பெற்றால், மேற்கூறிய கெடுதல்கள் இருக்காது. உடன் இருப்பவர்கள் கைகொடுப்பார்கள். உதவுவார்கள்.

12 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்: தகாத வழிகளில் சுகபோகங்களை அனுபவிப்பதோடு, செல்வத்தை இழந்து, வாழ்க்கையைக் கழிப்பார்கள். ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதி இருக்காது இங்கே வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு எதிர்பாராத துன்பங்கள் தொல்லைகள் வந்து சேரும். நண்பர்களைப் பிரிய நேரிடும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டுக் கைப்பொருள்களை இழக்க நேரிடும். சொத்துக்கள் கரையும். சிலர் தவறான நடவடிக்கைகளில் ஏடுபட்டுப் பிறகு மாட்டிக்கொண்டு துன்பப்படுவார்கள். தவறான நடவடிக்கைகள் என்பது, கடத்தல், பிறரை ஏமாற்றுதல், பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்தல், கள்ள நோட்டுப் பரிவர்த்தனை போன்ற செயல்கள் என்று பொருள் கொள்க எட்டாம் அதிபதி இங்கே வந்து அதாவது பன்னிரேண்டில் அமர்ந்து, பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் திரிகோண வாழ்வு பெற்றால், ஜாதகன் ஆன்மிக வழியில் சென்று, பெரும் செல்வம் மற்றும் புகழை ஏற்படுத்திக்கொள்வான். எட்டாம் அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் பன்னிரெண்டாம் வீட்டுக்காரனுடன் இருந்தால், இருவரும் சேர்ந்து ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுப்பார்கள். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்

எட்டாம் இடத்தில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்:


1 சூரியன் சூரியனுக்குப் பொதுவாக 1,2,3,4,5, 8, 9 & 11 ஆகிய இடங்கள் உகந்த இடங்கள்: 6, 7, 10 &12 ஒவ்வாத இடங்கள். 8ஆம் இடத்தில் வந்தமரும் சூரியன், ஜாதகனுக்கு, சிக்கலான சூழ்நிலைகளில் கைகொடுப்பான். ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் வந்தமர்ந்திருந்தால், அதுவும் உச்சம் பெற்றிருந்தால், ஜாதகனுக்குப் பூரண ஆயுள் உண்டு. கவர்ச்சிகரமாக இருப்பான். சிலர் சிறந்த மேடைப் பேச்சாளராக உருவெடுப்பார்கள். பெண்ணாக இருந்தால் தமண்னாவைப்போல கவர்ச்சியாக இருப்பாள். எட்டாம் இடத்தில் சூரியனுடன் எட்டாம் அதிபதி அல்லது 11ஆம் அதிபதி சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் திடீர் பொருள் வரவுகள் உண்டாகும் அதே நேரத்தில், எட்டாம் இடத்தில் வந்தமரும் சூரியன், பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது நீசம் பெற்றிருந்தால் அல்லது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருந்தால், அது ஜாதகனுக்குச் சாதகமானதல்ல.சிலருக்கு முகத்தில் தழும்புகள், வடுக்கள் ஏற்படும். வழ்க்கை சிலாக்கியமாக இருக்காது! கண் பார்வைக் குறைவுகள் ஏற்படும்.
2. சந்திரன் எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தமர்ந்திருந்தால் மனப்போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். மன நிம்மதி இருக்காது. உளவியல் பிரச்சினைகள் உண்டாகும். நிலையான பிடிப்புடையவனாக ஜாதகன் இருக்க மாட்டான். உடல் நலமில்லாதவனாகவும் இருப்பான். சிலருக்கு தாய் அவனுடைய சின்ன வயதிலேயே, ஜாதகியாக இருந்தால், அவளுடைய சின்ன வயதிலேயே இறந்து போயிருப்பாள். தாயில்லாக்குழந்தையாக வளர்ந்திருப்பான். அல்லது வளர்ந்திருப்பாள். கண் பார்வைக்குறைகள் உண்டாகும். வம்சாவழிச் சொத்துக்கள் வந்து சேரும். எதையும் அனுபவித்து மகிழக்கூடிய தன்மை இருக்கும். போர்க்குணம் மிகுந்திருக்கும். பெருந்தன்மையும் உடன் இருக்கும். சந்திரன் எட்டில் இருக்க, ஜாதகத்தில் (வேறு எங்கேனும்) சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகும்.
3. செவ்வாய் ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லாமல், செவ்வாய் வந்து எட்டில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குறைந்த ஆயுள். சிலர் மனைவியை இழந்து துன்பப்பட நேரிடும். குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும். தங்களது சுயமகிழ்ச்சிக்காகச் சிலர், வேறு பெண்களைத் தொடுப்பாக வைத்திருப்பார்கள். தொடுப்பு என்றால் என்னவென்று தெரியுமல்லவா?. உறவுகளூடன் மோதல்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகளால் நிலை குலைந்து இருக்கும். அதாவது வெளியே சொல்லும்படியாக இருக்காது. சிலருக்கு மூலநோய் (piles complaint) இருக்கும். மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவார்கள்.
4. புதன் எட்டாம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு. ஜாதகனுக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும் தன்மை இருக்கும். யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும். செல்வம் பலவழிகளில் வந்து சேரும். ஜாதகனும் தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவான். சுருக்கமாகச் சொன்னால் செல்வந்தனாக இருப்பான் . அதிகம் கற்றவனாக இருப்பான். பண்டிதனாக இருப்பான். எல்லா விஷயங்களும் தெரிந்தவனாக இருப்பான். அதிக நாள் உயிரோடு இருப்பான். அதே நேரத்தில் ஆசாமி நோஞ்சான் வடிவத்தில் இருப்பான்.
5 குரு ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அறங்கள் செய்பவனாக இருப்பான். பேச்சுத்திறமை இருக்காது. மறைமுகமாகப் பல தகாத செயல்களைச் செய்வான். ஆனால் அவைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வான். சிலருக்கு விதவைப் பெண்களுடன் அல்லது தகாத பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடல் உபாதைகள், வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். மரணம் ஏற்படும் சமயத்தில், வலியில்லாத மரணம் உடையவனாக இருப்பான். குரு நீசமடைந்திருந்தால், வாழ்க்கை சுத்தமாக மகிழ்ச்சியற்றதாக இருக்கும்

6 சுக்கிரன் எட்டாம் இடத்தில் சுக்கிரன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு. பல வரங்களுடன் பிறந்த அமைப்பு. ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும். சிலருக்கு, அவர்களுடைய சின்ன வயது வாழ்க்கை ஏமாற்றங்களும், உணர்ச்சிப் போராட்டங்களும் நிறைந்ததாக  இருந்திருக்கும். அதன்காரணமாக வயதான காலத்தில் ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மச் சிந்தனைகளும் உடையவர்களாக இருப்பார்கள். தங்கள் பெற்றோர்கள் மீது அதீத அன்பையும் பாசத்தையும் வைத்திருப்பார்கள். எட்டாம் இடத்து சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அதீதமான செல்வம் சேரும். எட்டில் அமரும் சுக்கிரன் நீசமடைந்திருப்பதோடு, சனியின் பார்வையைப் பெற்றிருந்தால், ஜாதகன் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை வாழ நேரிடும்.

7 சனீஷ்வரன் எட்டாம் இடத்தில் சனீஷ்வரன் வந்து அமர்வது நன்மையான அமைப்பு. ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.நீண்ட ஆயுள் நன்மையான அமைப்பு என்று எடுத்துக்கொள்வோம். ஜாதகனுக்குப் பல பொறுப்புக்கள் வந்து சேரும். அனைத்தையும் அவன் அசத்தலாகக் கையாள்வான். அதாவது சங்கடமின்றி முழுமனதுடன் செய்வான். இடையூறுகள், தடைகள் என்று எது வந்தாலும் அவற்றை உடைத்து செய்ல்புரிவான். சிலருக்குக் கண் பார்வைக்கோளாறுகள் ஏற்படும். குறைந்த எண்ணிக்கை யிலேயே குழந்தைகள் இருக்கும். பெண்கள் மேல் மயக்கம் கொண்டவனாக இருப்பான். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடல் உபாதைகள் மற்றும் தீராத பிணிகள் இருக்கும். நோய் என்றால் திர்க்ககூடியது. பிணி என்றால் தீர்க்க முடியாதது என்று பொருள் கொள்க! சிலருக்குத் தீராத வயிற்றுக்கோளாறுகள், வாய்த்தொல்லைகள் கூடவே இருந்து கழுத்தறுக்கும் இங்கே வேறு தீய கிரகம் வந்து சனியுடன் சேர்ந்துகொண்டால், ஜாதகனுக்கு, அவனுடைய குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்காது. சிலர் நேர்மையில்லாதவர் களாக இருப்பார்கள்
8 ராகு எட்டாம் இடத்தில் ராகு வந்து அமர்வது நன்மையான அமைப்பு அல்ல! ஜாதகனுக்குப் பலவிதமான நோய்கள் தேடிவந்து படுத்தி எடுக்கும். சமூகத்தில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காது. அல்லது அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். நல்லது எது கெட்டது எது என்று ஆராயாமல் எதையும் எடுத்தேன், செய்தேன் என்று இருப்பான். தர்க்கம் செய்பவனாக இருப்பான். தகராறு செய்பவனாக இருப்பான். உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் கைகலப்பில் இறங்குபவனாக இருப்பான் (பொதுவிதி) ஜாதகத்தில் சந்திரன் ஒரு தீய கிரகத்துடன் கூட்டாக இருந்து, அதே ஜாதகத்தில் ராகு 8, 12 அல்லது 5ஆம் இடங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மன நோய் உண்டாகும்!

9 கேது எட்டாம் வீட்டில் கேது இருந்து, ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும். அதே கேது எட்டாம் வீட்டில் இருப்பதுடன் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் அடுத்தவர்களின் சொத்தையும், சமயத்தில் பெண்களையும் அபகரித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவான். பலவிதமான நோகளுக்கும் ஆளாவான் எட்டாம் வீடு துன்பங்களுக்கும் உரிய வீடு. எட்டாம் வீடு கெட்டிருந்தால், ஜாதகனுக்கு உடல் நோய்கள் இருக்கும் அல்லது மனநோய் இருக்கும். எட்டாம் வீடு கெட்டிருக்கும் அளவை வைத்து நோய்களின் அளவும் மாறுபடும். சாதாரண நோயாகவும் இருக்கலாம். அல்லது புற்றுநோய் (cancer) போன்ற கொடிய நோயாகவும் இருக்கலாம்




Keine Kommentare:

Kommentar veröffentlichen