வீரப்பா யின்னமொரு புதுமைகேளு
விளம்புகிறேன் வீரியன் வீட்டில்தானும்
ஆரப்பா அசுரர்குரு செவ்வாய்கூடில்
அப்பனே அமங்கலையை அணைந்துவாழ்வன்
கூரப்பா குமரனுக்கு வித்தைபுத்தி
குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்
சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே
சிறப்பாகப் புலிபாணி செப்பினேனே.
வீரமிக்கவனே! இன்னுமொரு புதுமையினையும் நன்கு கேட்பாயாக. சூரியனது வீடான சிம்மத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியும் செவ்வாயும் கூடினால் அச்சாதகன் அமங்கலையை அணைந்து அவனுக்கு வித்தை புத்தி மிகுந்து இந்நிலவுலகில் நிதி மிகுந்தவனாய் சிற்ப சாத்திரத்தில் வல்லவனாய் நூலாராய்ச்சி உடையவனாவன் என எனது சற்குருவான போகமாமுனிவரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen