ஆச்சப்பா பத்தெட்டில் கோள்கள் நிற்க
அப்பனே அவரவர்கள் பொசிப்புநாளில்
கூச்சப்பா குழவியுட பிதுரைத்தேடி
கொற்றவனே கண்டனுமே வருவான் கூறு
மூச்சப்பா மேதினியில் செம்பொன்தேடி
முகமினுக்கி மாதருடன் கூடிவாழ்வன்
யேச்சப்பா போகருட கடாட்சத்தாலே
இடமறிந்து நிலைகூர்ந்து இயம்புவாயே.
மற்றுமொரு செய்தினையும் நீ கேட்பாயாக! இலக்கினத்தி’ற்குப் பத்தாம் இடம், எட்டாம் இடம் ஆகியவற்றில் கிரகங்கள் இருந்து அவரவர் தம்முடைய வாழ்நாளில் அச்சாதகனுடைய பிதுர்களைத் தேடி எமதூதனான சண்டன் வருவான் என்றும் கூறுவாயாக. அச்சாதகன் புவியில் நிறையச் செம்பொன்னைத் தேடிச் சேர்ப்பதோடு முகத்தை மினுக்கித் திரியும் வேசியரைக் கூடி வாழ்வான் என்று கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்து கூறுக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen