நன்றாகப் பாம்புகள் தான் நாலிலேனும்
நலமாக ஈராறும் இருநான்கேனும்
சென்றிட்ட தீயர்பலர் செய்யாரப்பா
திறமான நாலில் நின்றால் மாதர்தோஷம்
குன்றிவிடும் யீராறில் பாதரோகம்
குணமான இருநான்கில் கூறும்பாம்பால்
நன்றாக மிகுபயமா மற்றராசி
நலமென்றே புலிப்பாணி நவின்றிட்டேனே
இராகு, கேது என்னும் பாம்புகள் இலக்கினத்திற்கு நான்கிலேனும் மற்றும் 12,8 ஆகிய இடங்களிலும் அமர்ந்தால் நற்பலன்களைச் செய்வார். நான்கில் நிற்பினும் மாதர்தோஷம் குறைவினைச் செய்யும். பன்னிரண்டாம் இடத்தில் நிற்க பாதரோகமும் அட்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் நிற்க மிகுதியான பயமும் ஏற்படும்., பிற இராசிகள் நலமுடையதென்றே சற்குருவான போக மாமுனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen