பரந்திட்டேனின்ன மொன்று பகரக்கேளு
பானு மைந்தன் பால்மதிக்கு யெட்டில்நிற்க
சிறந்திட்டேன் ஜென்மனுக்கு அனேகதுன்பம்
செத்திறந்து போவதற்கு யெண்ணங்கொள்வன்
அறைந்திட்டேன் அகம்பொருளும் நிலமும் நஷ்டம்
அப்பனே அரசனிடம் தோஷமுண்டாம்
குரைந்திட்டேன் குடிநாதன் கேந்தரிக்க
குற்றமில்லை புலிப்பாணி கூறக்கேளே
பரிவுடன் இன்னொரு கருத்தையும் நான் கூறுகிறேன். கேட்பாயாக! சூரிய புத்திரனான சனிபகவான் சந்திரனுக்கு எட்டில் நிற்க அனேக விதமான துன்பங்கள் ஏற்படும். அவன் தற்கொலை செய்து கொள்வதற்கும் எண்ணுவான். அவனது மனையும், பொருளும், நிலமும் நஷ்டமாகும். அது மட்டுமல்லாமல் அரசர்களது கோபத்திற்கும் ஆளாகும் தோஷமும் உண்டாகும். எனினும் லக்கினாதிபதி கேந்திரத்தில் இருக்கக் குற்றமில்லை என்றே போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen