கேளப்பா பீசத்தில் நோயுண்டாகும்
கெதியுள்ள குழவிக்கு ரோகங்கிட்டும்
வீளப்பா தொங்கிடுவன் வெகுபேர்காண
விளங்குகின்ற தூக்குமரக் கோலில் தானும்
பாரப்பா பீரங்கி வெடியால் கேடு
பலதுன்பம் விளையுமடா பொருளும் நஷ்டம்
நீளப்பா நீர்ப்பயமும் தீயால்வேதை
நீரிடியும் விழுகுமடா நிசஞ்சொன்னோமே.
அட்டமாதிபதியால் மேலும் ஏற்படும் துன்பங்களைக் கூறுவேன் கேட்பாயாக! பீசத்தில் நோய் உண்டாதலும், நற்கதியுள்ள குழவிக்கு பலவித ரோகங்கள் ஏற்படுதலும், பல பேரும் கண்டு அனுதாபப்படுமாறு தூக்கில் தொங்கி மரணமடைதலும், மற்றும் பீரங்கி முதலிய வெடிகளால் ஏற்படும் துன்பங்களும் போன்ற பலவும் ஏற்படுவதோடு அனேகப் பொருள் நஷ்டமும், ஜலத்தில் கண்டமுள்ளதாதலால் பயமும் தீயால் துன்பமும் நீரில் இடி விழுதலும் நேர்ந்து மிகத்துன்பம் உண்டாகும் என்பதையும் போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen