ஆரப்பா யின்னமொரு புதுமைக்கேளு
அம்புலியும் அசுரகுரு யேழில்நிற்க
கூரப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலரைக்கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்டிவிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவன் ஸ்தனங்குலுங்க வருவாள்பாரே
இன்னும் ஓர் அதியசயமான செய்தியையும் கூறுகிறேன். நன்கு ஆராய்ந்து கேட்பாயாக! சந்திரனும் அசுரகுருவான சுக்கிரனும் இலக்கினத்திற்கு ஏழில் நிற்க அச்சாதகி கிழவனுக்கு மாலையிட்டு அவனால் மனநிறைவு பெறாமல் காமவயப்பட்டு பலரையும் கூடி சிறப்பான புதல்வனையும் பெற்றெடுத்து அவனைத் தொட்டிலிலிட்டு ஊரார் வியக்க ஆட்டுவதோடு தனது ஸ்தனங்கள் குலுங்கப் பெருமையோடு வருவாள் என்பதையும் புலிப்பாணி உனக்கு உணர்த்தினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen