பாரப்பா அட்டமனு மெவரானாலும்
பலமுள்ளோர் அப்பலனை பணிந்துகேளு
சீரப்பா சிறைமரணம் கிரிமேலேறி
சிவசிவா வீழ்ந்திடுவன் தேசம் செல்வன்
கூர்ப்பா கொடும்பகையும் கொடுவாள்காயம்
குடிமண்ணுஞ் சீவனமும் மோசக்கேடு
வீரப்பா விஷபயமும் அம்மைபேதி
விளையுமடா பலதுன்பம் வினையைக்கேளே.
இன்னொன்றையும் நீ நன்கு ஆராய்ச்சி பூர்வமாக கவனித்து உணர்க! இலக்கினத்திற்கு அட்டமாதிபதி எவரானாலும் பலமுள்ளவரே. அதன் பலனைப் பணிவுடன் கேட்பாயாக. அவனால் சிறைப்படுத்தலும், மரணம் வாய்த்தலும், மலைமேல் ஏறித் தவறிவிழுந்து இறத்தலும் பரதேசம் செல்வதும் மற்றும் கொடியபகையும், கொடுவாள் போன்ற ஆயுதங்களால் ரணமும், குடும்பத்திற்கும், பூமிக்கும் ஜீவனத்திற்கும் மோசமும் கேடு விளைத்தலும் மற்றும் விஷபயமும் மற்றும் கொள்ளை நோயான அம்மை, பேதி போன்ற பற்பல விதமான துன்பங்களைத் தரும் வினையும் நேரும் என உணருக.
Keine Kommentare:
Kommentar veröffentlichen