பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே.
-விளக்க உரை- ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன் மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக. "
Keine Kommentare:
Kommentar veröffentlichen