திருமணப்பொருத்தம் பார்த்தல்
தமிழில் ஜாதகம், திருமனபொருத்தம் பார்பதர்க்கு
www.freehoroscopesonline.in
http://www.astrology.tamilcube.com/tamil-horoscope.aspx |
http://www.tamilsonline.com/jathaka_porutham.aspx
விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்
4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல
கணவனாகக் கிடைப்பான்.
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம்
அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில்
மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால்
அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன்
பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது
பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது
பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை
விரும்ப மாட்டான்
21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன்
ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும
25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும்
வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில்
இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால்
பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. . அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) -
அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப்
பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில்
போய் உட்கார்ந்து கொள் நோரிடும்
37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன்
மகிழ்ச்சியில் திளைப்பான்.
41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும்
பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள்
. அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது
. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.
திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:
1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்
3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது
7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!
8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!
9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!
10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!
11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!
12. எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல
முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன:
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.
1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.
பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த அமைப்பில் இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.
ஜன்ம நட்சத்திரம் முதல்:
10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசி எனில் நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்
ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.
ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.
ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம். கெடுதல் இல்லை.
உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.
ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.
சதயம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.
2. கணப்பொருத்தம்: (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.
இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை ராட்சத கணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.
ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.
ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.
3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.
4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.
பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)
5. யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.
இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில் ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.
ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.
6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.
பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். ரிஷபம் முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.
பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.
7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி)
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.
இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.
8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு)
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.
பெண் ராசி : ஆண் ராசி
மேஷம் : சிம்மம் , விருச்சிகம்
ரிஷபம் : கடகம், துலாம்
மிதுனம் : கன்னி
கடகம் : விருட்சிகம், தனுசு
சிம்மம் : மகரம்
கன்னி : ரிஷபம், மீனம்
துலாம் : மகரம்
விருச்சிகம் : கடகம், கன்னி
தனுசு : மீனம்
மகரம் : கும்பம்
கும்பம் : மீனம்
மீனம் : மகரம்
9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கலியாய் இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.
கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.
சிரோ ரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபி ரச்சு (உதரம்) : கிருத்திகை , புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊரு ரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாத ரச்சு (பாதம்): அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம். ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.
சிரோ ரச்சு: புருஷன் மரணம்
கண்ட ரச்சு: பெண் மரணம்
நாபி ரச்சு: புத்திர தோஷம்
ஊரு ரச்சு: பண நஷ்டம்பாத ரச்சு: பிரயாணத்தில் தீமை
10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.
வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.
அஸ்வினி - கேட்டை பரணி - அனுஷம் கார்த்திகை - விசாகம் ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம் புனர்பூசம் - உத்திராடம் பூசம் - பூராடம் ஆயிலியம் - மூலம்மகம் - ரேவதி பூரம் - உத்தராட்டாதி உத்திரம் - பூரட்டாதி அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை
இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
http://www.astrology.tamilcube.com/tamil-horoscope.aspx
1. ஏழாம் வீட்டு அதிபதி நீசமடைந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
2. ஏழாம் வீட்டு அதிபதி ஒரு தீய கிரகத்தின் வீட்டில், ஒரு தீய கிரகத்துடன் அமர்ந்திருக்கும் நிலைமை! அத்துடன் ராசிச்சக்கரத்தில் ஏழாம் வீடு அல்லது நவாம்சச்சக்கரத்தில் ஏழாம் வீடு ஒரு தீய கிரகத்தின் வீடாக இருக்கும் நிலைமை.
3. செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தால், அல்லது சனி 12ஆம் வீட்டில் இருந்தால், அத்துடன் லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
4. சுக்கிரன் இரட்டை ராசியில் இருந்தால் (if Venus is in a dual sign), அத்துடன் சுக்கிரன் அமர்ந்த வீட்டின் அதிபதி உச்சமாகி இருந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் (சர்வார்த்த சிந்தாமணி)
5. ஏழாம் அதிபதி, உச்சமாகி இருப்பதுடன், வக்கிரகதியும் பெற்றிருக்கும் நிலைமை.
6. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில், ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம், இரண்டாம் அதிபதி ஒரு தீயகிரகத்துடன் சேர்க்கை - ஆகிய அமைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணத்தைக் கொடுக்கும்.
7. ஏழாம் அதிபதி 3, 6, 8, &12 போன்ற மறைவிடங்களில் இருந்தாலும், அல்லது நீசமாகி ஒரு சுபக்கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும், அத்துடன் ஏழாம் வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தாலும், ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
8. சுக்கிரன் கன்னிராசியில் நீசமடைந்திருப்பதோடு, ஒரு தீயகிரகத்தின் கூட்டணியோடு இருந்தாலும் அல்லது நவாம்சத்தில் நீசமடைந்திருந்தாலும் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
9. ஏழாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டிலும் தீய கிரகங்கள் அமர்ந்திருந்து, அதன் அதிபதிகள் கெட்டிருந்தால், ஜாதகனின் முதல் மனைவி இறப்பதுடன், ஜாதகனுக்கு இரண்டாம் திருமணமும் நடைபெறும்.
10. ஏழாம் வீட்டிலும், எட்டாம் வீட்டிலும் தீயகிரகங்கள் இருப்பதுடன், செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதுடன், ஏழாம் அதிபதியின் பார்வை ஏழில் விழுகவில்லை என்றால், ஜாதகன் தன் முதல் மனைவியை இழந்துவிட்டு, மறுமணம் செய்துகொள்ள நேரிடும்.
11. லக்கினத்தில், 2 மற்றும் 7ஆம் வீடு, ஆகிய மூன்று இடங்களிலும் தீய கிரகங்கள் இருந்து, ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்றிருந்தாலும் அல்லது நீசமாகி இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
12 ஏழாம் அதிபனும், பதினொன்றாம் அதிபனும் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரும் திரிகோணம்பெற்று, ஒருவரை ஒருவர் பார்த்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
13. ஒன்பதாம் வீட்டதிபதி ஏழிலும், ஏழாம் அதிபதி நாலிலும் இருந்தால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம். அதுபோல 7 & 11 ஆம் அதிபதிகள் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
14. இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளில் தீயகிரகங்கள் இருப்பதுடன், ஏழாம் அதிபதி ஒரு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
15. இரண்டு மற்றும் பன்னிரெண்டாம் இட அதிபதிகள் மூன்றாம் வீட்டில் இருந்து, குரு அல்லது ஒன்பதாம் இட அதிபதியின் பார்வை பெற்றால், ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம்.
இது எல்லாம் பொதுவிதிகள்.
திருமண விஷயமாக அல்லது முதல் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த விதிகளை மனதிற்கொண்டு அலசினால் ஒரு தெளிவும் கிடைக்கும்!
Keine Kommentare:
Kommentar veröffentlichen