பாரப்பா பதிக்கேழு நாலே ழெட்டில்
பாங்கான கோள்களது சேர்ந்துநிற்க
சீரப்பா சென்மனுந் தனித்துநில்லான்
செம்பொன்னும் கோடியுண்டு சிற்ப்பாய்வாழ்வன்
வீரப்பா வெகுபூமிக் கரசனாகி
வீரர்படை கரிமாவும் ரதங்களுள்ளோன்
கூரப்பா குவலயதில் யென்னூல்பாரு
குணமாக புலிப்பாணி குறித்திட்டேனே.
இலக்கினத்திற்கு 4,7, பாங்கான கிரகங்களானது பரிவுடன் சேர்ந்து நிற்கப் பிறந்த சாதகன் தனித்து நில்லான், சிறந்த செம்பொன்னும் கோடிதனமும் கொண்டவனாய்ச் சிறப்புடன் வாழ்வான். படைபலமும் யானை,குதிரை,ரதம் முதலியவை உடைவனவாய் இந்நிலவுலகில் கீர்த்தி பெறுவான். போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி நூற்கருத்தைக் கு றித்திட்டேன்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen