Sonntag, 9. September 2012

Pulippani-தேவதை வசியன்








ஆமென்ற செவ்வாயும் ராகுமாந்தி அப்பனே ரெண்டோனைக் கூடிநிற்கில் போமென்ற பூதலத்தில் பரமன்பூசை புகழ்பெரிய அய்யனோடு ருத்திரன் ருத்திரி ஓமென்ரே ஓங்காளி வீரபத்திரன் ஓதிடுவன் ஆகாச மாடந்தானும் தாமென்ற போகருட கடாட்சத்தாலே தப்பாமல் செய்திடுவன் சென்மந்தானே -விளக்க உரை- இன்னுமொன்று கூறுகிறேன் கேட்பாயாக! செவ்வாயும் ராகுவும் மாந்தியுடன் இலக்கினத்திற்கு இரண்டிற்குரியவனைக் கூடி நிற்பின் அச்சென்மன் இப்பூதலத்தில் சிவ பூஜையும், பெரிய புகழ் உடைய ஐயனார். மற்றும் உருத்திரன், உருத்திரி, ஓங்கார வடிவினளாம் காளி மற்றும் வீரபத்திரன் மற்றும் ஆகாசமாடன் ஆகியோருடைய பூஜைகளையும் செய்யும் தேவதை வசியன் என்று போகருடைய கருணையாலே புலிப்பாணி கூறினேன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen