Montag, 10. September 2012

பதினோராம் இடம்



பத்தின்மேலொன்றாகும் பலனைநன்றாய்
பகருகிறேன் பயிர் வளப்பம் பரிநல்வேழம்
வித்தைமிகு லாபங்கல் லறிவுசேர்க்கை
மிகுமனதிற்றூக்கமொடு சிவிகைசேரும்
உத்தரியஞ் செறிந்தபசும் பொன்னையொத்த
உயர்மனைவி யோகமது முதலாயுள்ள
மெத்தவே நீயறிந்து விளம்புவாயேல்
வேதமா யுன்வார்த்தை விரும்புவாரே       

 

பதினோராம் இடத்தின் பலன்களாவன: விவசாய அபிவிருத்தி ஏற்படுதலும், பரியொடு யானை முதலியன வாய்த்தலும் (வாகனங்கள் அமைதலும்) நல்ல வித்தைகள் வாய்த்தலும், மிகுந்த இலாபங்கள் வாய்த்தலும், நல்ல அறிவுடையோர் தொடர்பு வாய்த்தலும், மனத்தில் ஊக்கமும் சிவிகை சேர்தலும், உத்தரியம் மகரகண்டிகை வாய்த்தலும், நன்மனைவி யோகமும் இது போன்ற நன்மையானவை யெல்லாம் நன்கு ஆராய்ந்து குறித்துக்கூற உன்றன் வார்த்தைகளை வேதமாய், எண்ணிக் கொண்டாடுவார்கள். 


Keine Kommentare:

Kommentar veröffentlichen