Montag, 10. September 2012

ரிஷபம் மிதுனம்



சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு
சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.
அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற
அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு
தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்
தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு
குள்ளப்பா குருமதியுங் கோணமேற
கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே

அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம்,உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக.                                      

Keine Kommentare:

Kommentar veröffentlichen