Sonntag, 9. September 2012

Pulippani-குளிகன் 11








தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத் தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன் யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு யென்மகனே வசியனடா ஜாலக்காரன் வீணென்ற விரயனடா ரசவாதத்தால் விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான் கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே -விளக்க உரை- இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன். இனி பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக.

Keine Kommentare:

Kommentar veröffentlichen