Sonntag, 9. September 2012

ஆட்சி உச்ச நீச்ச பகை நட்பு வீயாழன்


ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு உண்மையுடன் தனுமீன மிரண்டேயாகும் காமென்ற கற்கடகம் உச்சமாகும் கனமில்லா மகரமது நீச்ச வீடாம் போமென்ற விருச்சிகமும் பகையதாகும் புகழ்பெற்ற மற்றேழு ராசிநட்பாம் நாமென்ற போகருட கடாக்ஷத்தாலே நயமாக புலிப்பாணி நவின்றிட்டேனே. ஓம் என்ற பிரணவப் பொருளை விளக்கும் வியாழனுக்கு தனுசும்,மீனமும் ஆட்சி வீடென்றும் கர்க்கடகம் உச்ச வீடென்றும் உச்ச வீட்டிற்கு ஏழாவதான இராசி மகரமானது நீச்சமென்றும் விருச்சிக ராசி பகையென்றும் மற்றைய இராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் நட்பு வீடுகளாமென போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன். [எ-று]




Keine Kommentare:

Kommentar veröffentlichen