Montag, 10. September 2012

பத்தாம் பாவம்


பத்தாகு மிடத்தினது பலனைக்கேளு
பட்டணங்கள் தாபித்தல் பலங்களோடு
வித்தான பலபுண்ணியந் தேசாபிமானம்
வீறான அரசனொடு கருமம் ஞானம்
சித்தமதி லிரக்கமிகு தெய்வபக்தி
சேருகின் றசவுரியமுங் கொப்பமூணும்
நத்துகின்ற பூசையோடு மனைவிசேர்க்கை
நலமாக விப்பலனை நவிலுவாயே.



பத்தாம் பாவகத்தின் பலன்களாவன: பட்டினங்கள் ஸ்தாபித்தலும், நல்லூழோடு பல புண்ணியம் செய்தலும் தேசாபிமானமும், அரசரோடு இணக்கமுறுதலும் நற்கருமம் ஞானம் முதலிய வாய்த்தலும், மனத்தில் இரக்க உணவு இழையோடுதலும் மிகுந்த தெய்வ பக்தியும் சிறந்த செளகரியமும் கருப்பம் வாய்த்தலும் நல்ல உணவு வாய்த்தலும் வெகுவான பூசைகளைச் செய்வதோடு துணைவி சேர்க்கையும் நலமாகக் குறித்தறிந்து கூறுவாய்.                           [எ-று]
 


Keine Kommentare:

Kommentar veröffentlichen