Sonntag, 9. September 2012

Pulippani;நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் சூரியன்










தானென்ற சூரியனுக்காட்சி சிங்கத்
தன்மையுள்ள மேஷமது உச்சமாகும்
தானென்ற துலாமதுவும் நீசமாகும்
தனியான தனுவுட னே மீனம் நட்பாம்
மானென்ற மற்றேழு ராசிதானும்
வரும் பகையா மென்றுனக்கு சாற்றினோம்யாம்
கோனென்ற போகருட கடாட்சத்தாலே
குணமான புலிப்பானி குறித்திட்டேனே.
 -விளக்க உரை- நவக்கிரகநாயகனான தன்னேரில்லாத சூரியதேவனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகவும், மேலும் உச்சவீடாகவும், துலாம் நீச்ச வீடாகவும் அமைவதுடன் தனித்தன்மை பெற்ற தனுசுடன் மீனம் நட்பு வீடாகும். தன்னிகரில்லாத குரு நாதரான போகரது கருணையினாலே இவை நீங்கிய மற்ற ஏழு வீடுகளும் பகையாம் என்று கூறினேன். [எ-று]


Keine Kommentare:

Kommentar veröffentlichen