Sonntag, 9. September 2012

8,9 ஆம் பாவம்

அஷ்டமயோக மரும்பிணி சண்டையும் நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும் துஷ்டடம்பமும் துன்றுமலையேறி கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே அஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.




ஒன்பதாம்பல னாகுமுபதேச
மின்பகூப மிகும் பணிகூபமும் வன்வதான பரியும் வளப்பமும் தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர் ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். [எ-று]




Keine Kommentare:

Kommentar veröffentlichen