பாரப்பா ஈராறோன் இருநான்கோனும்
பகருகின்ற செவ்வாயும் மூவர்சேர்ந்து
கூரப்பா யெவ்விடத்தில் கூடிட்டாலும்
கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரேனீ சுந்திரனும் கண்ணுற்றாலும்
சிலகாலந் தங்கிருந்து செம்பொன்தேடி
ஆரப்பா அவன் பதியில் வந்துவாழ்வன்
அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே
இன்னுமொரு விஷயத்தையும் சொல்லுகிறேன் நன்கு விளக்கமாக இதனையும் நீ கேட்பாயாக! 12க்குடையவனும் எட்டுக்குடையோனும் சேர்ந்து செவ்வாயுடன் மூவரும் சேர்ந்து எந்த இடத்தில் கூடிநின்றாலும் அவன் பரதேசம் செல்வான். இவர்களைச் சந்திரன் கண்ணுற்றாலும் சில காலம் அங்கே தங்கியிருந்து வெகுதனம் தேடி மீண்டும் அவனது சுயதேசத்தில் வந்து வாழ்வான் என போகமா முனிவரது பேரருட் கரணையால் புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen