சீர்மலிமுதற்பாகத்தின் பலன் றான் சித்தி தங்கிலேச மெய்சொரூபம்
பேர் மலிவயதும் பகர்தனுத்தானம் பெருநிதிகீர்த்தி மூர்த்திகளும்
ஏர்மலிசு பந்தோஷநிறமும் மிலக்கணமுபாங்கமே முதலாம்
தார்மலிபோகர் தாளிணைவணங்கிச்சாற்றினே புலிப்பாணிதானே
பெருமைக்குரிய மாலையணிந்த என் குருநாதர் போகமுனிவரின் தாளிணை பணிந்து முதற் பாவகத்தின் மூலம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிய பெயர்களைக் கூறுவேன் கேட்பீராக, ஒரு ஜாதகனின் வடிவத்தையும் அறிவு நலனையும், வயதையும், தன சம்பந்தமான விஷயங்களையும், கிடைக்கும் பெருநிதியையும். புகழையும்,அடையும் பேறுகளையும், ஏற்படக்கூடிய இன்பங்களையும், நிறத்தையும் குண விசேடங்களையும் நன்கு கூறலாம். [எ-று]
Keine Kommentare:
Kommentar veröffentlichen