Sonntag, 9. September 2012

Pulippani- Saturn சனிபகவான்






கனமுள்ள நவமாறு லாபம் மூன்று கதிர்மைந்த னதிலிருக்க விதியும் தீர்க்கம் தனமுண்டுபிதுர் தோஷம் சத்துருபங்கம் தரணிதனில் பேர்விளங்கும் அரசன்லாபம் குணமுள்ள கருமத்தி லிருக்கநல்லன் கொற்றவனே வாகனமும் தொழிலுமுள்ளோன் பொணம் போலபோகாதே சபையில் கூறு பூதலத்தில் யென்னூலைப் புகழுவாயே. -விளக்க உரை- பெருமைக்குரிய 9,6,11,3 ஆகிய இடங்களில் சூரிய குமாரனான மந்தன் என்ற சனிபகவான் நிற்க அச்சாதகனுக்கு ஆயுள் தீர்க்கம். நிறை தனமுடையவர். அதே போல் பிதுர் தோஷமும் உடைய அச்சாதகன் சத்துரு பங்கனாகவும் இருப்பான். பூமியில் அவனது புகழ் விளங்கிக் காணும். அரச லாபம் பெறுவான். இனி, சனிபகவான் 10இல் நிற்க அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைவான். வாகன யோகம் உடையவனாகவும், செய் தொழில் கீர்த்தி உடையவனாகவும் விளங்குவான். இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போலப் பேசாமல் இராதே. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டுக் கூறுவாயேல் நீ புவியில் என்னூலைப் போற்றுவாய்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen