பாரப்பா பால்மதிக்கும் நான்கில்வெள்ளி பாங்குள்ள வெள்ளிக்கு நான்கில் இந்து ஈரப்பா இல்லுக்கு இவர்கள்நான்கில் இடிபோலே குமுறுமடா தாரையோகம் சீரப்பா சென்மனுக்கு சிவிகைகிரீடி சிறப்பான வாகனமும் நிலமும் செம்பொன் கூறப்பா போகருட கடாட்சத்தாலே குடினாதன் பெலமறிந்து கூறுவாயே. -விளக்க உரை- புலிப்பாணி போக மகா முனிவரின் பேரருட் கருணையாலே கூறுகின்ற மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! வளர்பிறைச் சந்திரனுக்கு நான்கில் சுக்கிரனும் அதே போல் சுக்கிரனுக்கு நான்கில் மதியும் நிற்கவும் அல்லது இலக்கினத்திற்கு நான்கில் இவர்கள் இருப்பினும் இடிமுழக்கம் செய்து வருவது போலக் குமுறிக் கொண்டு வரும் தாரை யோகம் ஆகும். இப்படிப்பட்ட சிறப்புடைய அமிசம் பெற்ற சாதகனுக்கு சிவிகையும்,விளைவயல் மற்றும் சிறப்பான வாகன யோகமும் நிலமும், செம்பொன்னும் நிறைந்த அளவில் வந்து சேரும். இதனை இலக்கினாதிபதியின் பலம் அறிந்து கூறுவாயாக.
Sonntag, 9. September 2012
Pulippani-தாரை யோகம்

Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen