கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து கனமுள்ள தனலாபம் ஆறில்நிற்க ஆளப்பா அகம்பொருளும் நிலமும் செம்பொன் அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன் சூளப்பாரு குடித்தலைவன் சத்துருபங்கன் கொற்றவனே வகையாகப் பகர்ந்து சொல்லே -விளக்க உரை- புலிப்பாணி ஆகிய நான் சொல்லும் இக்குறிப்பினையும் நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக! செவ்வாய் கிரகமானது 1,10,6 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின், அவனுக்கு மனை வாய்த்தாலும், செம்பொருட்சேர்க்கையும், சிறந்த நிலமும்,செம்பொன்னும் கிட்டுமென்றும், செய்தொழில் விருத்தியுடையவன் என்றும் பல குடும்பங்களைக் காக்கும் தலைவன் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் வீரனென்றும் மற்றைய கிரக நிலவரங்களை ஆராந்து கூறுவாயாக.
Note:2,11
Keine Kommentare:
Kommentar veröffentlichen