Sonntag, 9. September 2012

இரண்டாம் பாவம்





தானமிகு ரெண்டிடத்தின் பெயரைக்கேளு தனம்குடும்ப மொளிசெறிநேத் திரமும் வித்தை ஈனமிலாச் செல்வமுடன் சாஸ்திரவாக்கு இரும்பொன்னும் முபதேச மியம்புகேள்வி மானமிகு சவுபாக்கியங் கமனம் புத்தி மற்றுமுள்ள நவரெத்தின வகையின் பேதம் ஊனமிலா யிவை பார்த்து முணர்ந்துமென்று உரைத்திட்டேன் புலிப்பாணி உறுதியாமே. 12 சிறப்பு மிகுந்த இரண்டாம் பாவகத்தால் அடையும் பலன்களின் பெயர்களாவன: இத்தானம் தனஸ்தானம் என்றும் குடும்ப ஸ்தானம் ஒளிமிகுந்த நேத்திர ஸ்தானம் என்றும் கல்வி மற்றும் வித்தை ஸ்தானம் என்றும் மற்றும் செல்வம், சாத்திர அறிவு, வாக்கு, சிறப்புமிகு பொன் சேர்க்கை, உபதேசம், கேள்வி, மற்றும் சுக ஸ்தானம் என்றும் , மனம் , புத்தி மற்றும் நவமணிகளின் குற்றங்களையும் குறைகளையும் அறிந்துரைக்கும் குற்றமில்லாத தானமென்றும் உறுதியாகப் புலிப்பாணி உரைத்தேன் [எ-று]



Keine Kommentare:

Kommentar veröffentlichen