கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே
இலக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான1,5,9-இல் சூரியன் நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள்
மிகவும் தொல்லை தருவனவேயாகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெறஎடுத்துச் சொன்னேன். உணர்க! [எ-று]
Keine Kommentare:
Kommentar veröffentlichen