பாரப்பா யின்னமொன்று பகரக்கேளு
பரமகுருபால் மதியும் வெள்ளிமூவர்
சீரப்பா ஜென்மனுக்கு அஞ்சில் தோன்ற
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வான்
கூறப்பா குரு விருந்தால் புத்திரரற்பம்
குளிர்ந்தமதி தானிருந்தால் பெண்ணதாகும்
வீரப்பா வெள்ளிநின்றால் யோகம் மெத்த
விளம்புவாய் புவியோர்க்கு உலகின்கண்ணே
நான் கூறுகின்ற இன்னொரு கருத்தையும் நீ ஆழ்ந்து காண்க. தேவகுருவும் சந்திரனும் அசுரகுருவும் ஆகிய மூவரும் இலக்கினத்திற்கு ஐந்தில் நிற்க அச்சாதகன் இந்நிலவுலகில் மிகச் சிறப்புடன் வாழ்பவன் ஆவான்; அதே போல் ஐந்தில் குருதனித்திருக்க புத்திரர்கள் அற்பம் என்றும் சந்திரன் தனித்திருக்க பெண்சந்தானம் என்றும் இப்புவியோர்க்குக் கூறுக, போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
11th house and 2nd House:
கண்ணப்பா யின்னமொரு கருத்தைக்கேளூ கனத்ததொரு லாபத்தில் நிதியில் தோன்ற உண்ணப்பர் உயர்நீதியோன் நிதியில்தோன்ற உத்தமனாந் தண்டிகையும் துரகமுள்ளோன் பண்ணப்பா புதை பொருளும் கிட்டுங்கிட்டும் பலமான வித்தையடா யிருக்கும்பாரு திண்ணப்பா போகருட கடாட்சத்தாலே திடமான புலிப்பாணி சாற்றினேனே. நான் உனக்குக் கூறும் மற்றொரு கருத்தினையும் நீ கேட்பாயாக! முன்சொன்ன மூவர் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும் இரண்டாம் இடமான தனஸ்தானத்திலும் நின்ற பலன்களாவன: குருபகவான் நிதியில் தோன்ற அச்சாதகன் உத்தமன். பலவிதப் படைக் கலன்களும் குதிரைகளும் உடையவன். அவனுக்குப் புதையல் தனமும் பலமான வித்தையும் கிட்டும். இதனையும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

Keine Kommentare:
Kommentar veröffentlichen