Sonntag, 9. September 2012

Pulippani:-ஆட்சி உச்சம் பகை நீச்சம் சந்திரன்






பாரப்பா சந்திரனுக் காட்சிநண்டு பாங்கான விடைய துவே உச்சமாகும் வீரப்பா வீருச்சிகமும் நீசமாகும் விருது பெற்றதனுமீனம் கன்னி`நட்பு ஆரப்பா அறிவார்கள் மற்றாறு ராசி அருளில்லாப் பகையதுவே யாகும்பாரு கூரப்பா கிரகம் நின்ற நிலையைப் பார்த்து குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேனே. நவநாயகர்களில் சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகம், அருமையான ரிஷபராசி உச்ச வீடாகும். போர்க்குணம் கொண்ட விருச்சிகம் நீச்ச வீடாகும். மற்றபடி தனுசு, மீனம், கன்னி நட்பாகும். ஏனைய ஆறு ராசிகளும் [மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், கும்பம்] பகையதுவேயாகும் கிரகங்கள் நின்ற நிலையை நன்கு கவனித்துப் பார்த்துப் பலன் குறிப்பறிந்து கூறவேண்டும். [எ-று]

Keine Kommentare:

Kommentar veröffentlichen