கூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க கொற்றவனே துணைவனுடன் போரும்செய்வன் வீரப்பா விரதனடா வாய்ச்சமர்த்தன் விளம்புகிறேன் நாலினுட விவரங்கேளு பாரப்பா பதி கடந்து கிரியில் வாசம் பாலனவன் சிலகாலம் வாழ்ந்திருந்து கூறப்பா போகருட கடாக்ஷத்தாலே குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே. -விளக்க உரை- இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக. மேலும் நான் கூறுவதைக் கேட்பாயாக. குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை என்று போக முனிவரின் பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். இதை நன்கு ஆய்ந்து தெளிக.
Sonntag, 9. September 2012
Pulippani-மாந்தி மூன்றில்

Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen