பாடினேன் நின்னமொன்று பகரக்கேளு
படவரவு பரமகுரு சேர்ந்துநிற்க
கூடினேன் குளிர்ந்தமதி அருகில் நிற்கக்
கொற்றவனே குவலயமும் ஆளும்வல்லன்
தேடினேன் தேர்வீரர் கோடாகோடி
திடமுள்ள துரகங்கள் ரதங்கள்மெத்த
நாடினேன் போகருட கடாட்சத்தாலே
நாடெல்லா மாளுமன்னன் நயந்துபாரே.
மேலும் ஒன்றையும் நான் பாடுகிறேன். கேட்பாயாக! பாம்பும் பரமகுருவும் குளிர்ச்சி மிக்க சந்திரன் அருகில் நிற்க ஒரு மனையில் இருப்பின் அச்சாதகன் இக்குவலயம் ஆளும் மன்னனே ஆவான். கோடானு கோடி தேர் வீரர்களுடன் நல்ல ஆஜானுபாகுவான குதிரைகளையும் (குதிரைப் படையையும்) மற்றும் ரதங்களையும் உடைய வெற்றி வீரன் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen