அரைந்திட்டேன் நாலுபேர் கூடிநிற்க
அப்பனே அதற்குமற் றோர்கள் நிற்க
பரைந்திட்டேன் பாருலக மாளும்வல்லவன்
பகருகின்ற சேனைரதம் கணக்கேயில்லை
சிரந்திட்டேன் சிற்றரசர் மெத்தவுண்டு
செகத்திலே பேருள்ள ராசனாகி
குரைந்திட்டேன் கொடுமன்னர் எதிர்த்தாரானால்
கூற்றுவனைப் போலிருப்பன் ஆறினேனே.
வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! நாலு கிரகங்கள் கூடி நிற்க அவற்றுடன் மற்ற கிரகங்கள் உறவாய் நிற்க, அச்சாதகன் இந்நிலவுலகத்தை ஆளும் மன்னவன் என்றும் அவனது சேனை பலத்திற்கு அளவில்லை என்பதும், சிறந்த கப்பம் செலுத்தும் சிற்றரசர்கள் அவனுக்கு வெகுபேர் உண்டென்றும் என்றென்றும் நற்பேறும் புகழும் கொண்டு வாழ்வான் என்றும் இவனுக்கு எதிரிகள் இருப்பாரானால் அழிந்தொழிவர் என்றும்இவன் பகைவருக்கு எமன் போன்றவன் என்றும் போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen