Sonntag, 9. September 2012

Pulippani-நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம் புதன்


தானென்ற புதனுக்கு மிதுனமாட்சி தன்மையுள்ள கன்னியது மாட்சி உச்சம் மானென்ற மீனமது நீசமாகும் மனிதரிலாம் கடகமது பகையாமென்று வானென்ற மற்றேழு ராசிதானும் வகையான நட்பென்று வாழ்த்தினோம்யாம் நானென்ற போகருட கடாக்ஷத்தாலே நவக்கிரக நிலையறிவாய் நன்மைதானே தன்னிகரற்ற புதபகவானுக்கு ஆட்சி வீடு மிதுனம் என்றும், தன்மையுள்ள கன்னியது ஆட்சி வீடும், உச்ச வீடென்றும் மீனராசி நீச்ச வீடென்றும் மற்றும், கடகம், சிம்மம் பகை வீடென்றும் ஏனைய மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் எமது குருநாதரான போகரது அருளினாலே நட்பாம் என்ற வாழ்த்தினோம் எனினும் நவக்கிரக நிலையறிந்து பலன் கூறல் நன்மை பயக்கும். [எ-று]


Keine Kommentare:

Kommentar veröffentlichen