Sonntag, 9. September 2012

Pullippani-குளிகன் 5








கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை குணமாக வாழ்வனடா சேய்க்குதோஷம் தேரினேன் வீரனடா சத்துருபங்கன் திடமாக வாழ்வனடா தனமுள்ளோன் ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு அப்பனே அடுத்தோரைக் காக்கும் வீரன் கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க. கொற்றவனே இப்பலனைக் கூறினேனே. -விளக்க உரை- இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன், மேலும் இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக.

Keine Kommentare:

Kommentar veröffentlichen