பத்தின்மேல் இரண்டாகும் பெயரைக்கேளு
பரதேச வுத்தியோகம் பணத்தின்சோர்வு
சத்தான பலியோக சயனம் தியாகம்
தர்மமொடு கர்மபலன் சவுக்கியமாக
வித்தான பலபுண்ணிய விவாதமோடு
விளைந்திடுமே தொழிலான பலதானங்கள்
கத்தாதே போகருட கருணையாலே
கரைந்திட்டேன் புலிப்பாணி கருத்தைத்தானே.
பன்னிரண்டாம் பாவகத்தின் பலன்களாவன: பிறதேச செளக்கியம், உத்தியோகம், பணத்தால் ஏற்படும் சோர்வு பலயோகங்கள் வாய்த்தலும் சயன சுகம், தியாகம், தர்மம் ஆகியவற்றோடு கர்மபலனும் மற்றும் சுகமடைதலும், பல புண்ணிய சம்பந்தமும் விவாதத்தில் வல்லமையும் ஏற்படக் கூடிய தொழில்களும் பற்பல தானங்களும் வாய்த்தலை உணர்ந்து கூறினால் நன்மை பயக்கும் எனக் குருவருள் கொண்டு புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen